தன்னம்பிக்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜூலை, 2017

எறும்பினை உற்றுப்பாரு

                             எறும்பினை உற்றுப்பாரு  சுறுசுறுப்பை சொல்லி தரும்!
                                கரும்பினை கடித்துபாரு  சுவையினை அள்ளி தரும்!

வியாழன், 13 ஜூலை, 2017

உன்னத வாழ்வு

வீணையின் நரம்புகள் இறுக்கமானால்
நாதமும் நன்றாய் ஒலித்திடுமே!
வீழ்பவனுக்கு நம்பிக்கை துணையானால்
வெற்றிகள் என்றும் கிட்டிடுமே!
http://kavithaigal0510.blogspot.com
உன்னத வாழ்வு


ஞாயிறு, 19 ஜூன், 2016

மாயத்தோற்றமோ ?

மாயத்தோற்றமோ?
மாயத்தோற்றமோ ?
சிறுமழைத் தூறல்கள்
வானத்தில் ……….அழகாய்
வண்ணமயமாய்  வானவில்
ஒவ்வொரு வண்ணமும்
ஒரு இனிய  கவிதை!
 மனதிலே ஒரு சந்தேகம்

வெள்ளி, 10 ஜூன், 2016

இயற்கையை

முயற்சியை  மூலையில்  ஒதுக்காதே
----------முழுதாக  சோம்பேறி ஆகாதே
இயற்கையை  என்றும்  எதிர்க்காதே
--------ஏனென்ற  கேள்வியை  மறக்காதே!
பயிற்சியை ஒருநாளும்  விடாதே
----------பெருந்தன்மை குணத்தை குறைக்காதே!

திங்கள், 16 மே, 2016

வலைதனில்

வலைதனில்
கண்களிலே மையெழுதும்
காரிகையர் வலைதனில் வீழ்தல்
காதலாகும் !

ஞாயிறு, 15 மே, 2016

மையப் புள்ளியாய்

   வாசம் வசப்பட
மாறுவோம்….
ரோஜா இதழ்களாய்…..

விழித்திரையில்
விண்மீன்கள் விழ!
வைப்போம்
                விழிகளைவிழிப்பாய்…!

யாரோ

பூக்களில் தேனெடுக்கும்
வண்ணத்து பூச்சியே
பூக்களுக்கும் நோகாமல்
தேனெடுக்க கற்று தந்தது
 யாரோ?

செவ்வாய், 3 மே, 2016

வாழையென

வாழையென
வள்ளல் என்பதே அதன் தன்மை!
வாழை என்றே சொல்லிடுவோம்
மரமோ முகப்பில் வரவேற்கும்!
இலைகளோ விருந்தில் இடமாகும்
கனிகளோ நாவிற்கு சுவையாகும்
தண்டோ பருமனை குறைத்துவிடும்

சனி, 23 ஏப்ரல், 2016

புத்தக நாள் கவிதை


தங்கத்தில்
முதலீட்டை விட
மேலானதே
புத்தகங்களுக்கான
செலவுகள்!

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தேன் கிடைத்திடுமோ !

தேன் கிடைத்திடுமோ?
     தேனீ கொட்டுமேயென்று
      துவண்டு விடின்
       தேன் கிடைத்திடுமோ ?
       ஏணியை எட்டிஉதைத்திடின்
        ஏறுவது உச்சிக்கு    எங்ஙனமே!

சனி, 26 மார்ச், 2016

வெல்வதும் வீழ்வதும்

விதையொன்று விழுந்தால்
விருட்சமாகும்!
வீணாய் இருந்தால்
வீணாய் போகும்!

எறும்பாய் இருந்தால்
சுறுசுறுப்பாகும்!
சோம்பலாய் இருந்தால்
சுகமா வரும்!

கருவொன்று பிறந்தால்
கதைகளாகும்!
கருத்தொன்று எழுந்தால்
கவிதைகளுமாகும்

சுனையொன்று கொட்டினால்
அருவியாகும்!
வினையொன்று ஆற்றினால்
வினைகளாகும்!

வினாஒன்று எழுப்பினால்
விடையொன்று ஆகும்
கனாஒன்று கண்டால்
களிப்புமிக ஆகும்!

மலரொன்று மலர்ந்தால்
மணமாக வீசும்!
நிலவொன்று ஒளிர்ந்தால்
நித்திரை சுகமாகும்!

சொல்லொன்று உதிர்த்தால்
வார்த்தையாகும்!
சுள்ளென்று விழுந்தால்
எரிச்சலாகும்.

சொல்லொன்றா ,சுள்ளெனறா ?
சொல்லிடுக தோழா
வெல்வதும் வீழ்வதும்
அதனின் படியே!


---- கே. அசோகன்.

செவ்வாய், 8 மார்ச், 2016

காகங்கள் !

   
 காகங்கள்
கூவியழைக்கிறோம்
கூடி உண்ண
கவளம் வைக்கத்தான்
ஆளைக் காணோம்!

சாய்த்துசாய்த்து
பார்க்கிறோம்
காணவில்லை
சாதிமத சார்பற்ற
சரித்திர தலைவர்களை!

ஏளனம் செய்யாதீர்
எங்களை…!
யாரையும் பிடிப்பதில்லை
காக்கா

கரைகிறோம்
காலையில்….
குரல் கேட்டும்
குறட்டையில்!

தேர்தல் நேரத்தில்
எங்கள் குரல்களும்
கரைந்திடும்.
அரசியல்வாதியின்
குரல்களாலே!
                          
ஏமாறுகிறோம்
வாக்காளர்களைப் போல
ஏமாற்றும் குயில்களால்
கூவின பிறகுதானே!
எங்கள் இனமில்லையென!

எப்போது வருவான்
முண்டாசு கவிஞன்
மீண்டும் எங்களைப் பாட?

எங்களுக்கு இல்லையா?
சேவைக் கட்டணம்
சொல்கிறோமே!
விருந்தினர் வருகை!

வேட்டையாடியது உண்டா
எந்த வேடனாவது?
எங்களை……!
கருப்பாய் இருப்பதால்
பாதுகாப்பாகிறது.
தெரியவில்லையே
பெண்களுக்கு!
n  கே. அசோகன்.


வியாழன், 3 மார்ச், 2016

வரதட்சிணை !

வரதட்சிணை

தன்னம்பிக்கயற்ற
இளைஞர்கள்
பெறும் கையூட்டுகள்!

மனைவியை
காப்பாற்ற
வக்கில்லாதவன்
பெறுகின்ற
மொத்த கூலி

விடியல்களை
விரும்பாத
விட்டில்பூச்சிகளாகும்
மாப்பிள்ளைகள்

தன்னையே….
ஈடாக்கும்
பிணையப் பத்திரங்கள்!

போதுங்களா….
இன்னும் வேண்டுமா ?
வரதட்சிணையை
வரவேற்கும்….
மாப்பிள்ளைகளே!


--- கே. அசோகன்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மறு நாளில் பூக்கவே

மறுநாளில் பூக்கவே!

பூந்தேனை தேனீக்கள்
சேகரிக்க…..
எடுக்கிறோம்
துவண்டா போகிறது?
தேனீக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...