தத்துவ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 செப்டம்பர், 2017

வெள்ளி, 17 ஜூன், 2016

மனம் நிர்வாணம்!

ஆடையை விரும்பாதவர்
ஆருமுண்டோ ? அகிலத்தில்…. !

அணிந்து பார்த்து அழகு சேர்ப்பாளே!
அசைப் பெண்ணுக்கு ! பட்டாடை !
அம்மா

திங்கள், 16 மே, 2016

தணியா ஆசை


தணியா ஆசை
தணியா ஆசை 
        புற்களிலும்
         அழகாய்……
         பூக்கள் ?
         பனித்துளிகள்!

வெள்ளி, 6 மே, 2016

ஏதோ ஒன்று !

              
      
என்னையே      எனக்குள்
தேடுகையில்….
                          உடல் இங்கிருக்க       

                 மனமோ….      
                ஆடுகள் புற்களை
ஏதோ ஒன்று !    
மேய்வது  போலவே
தாவிதாவியே
எண்ண புற்களை
எங்கெங்கோ …..மேய்கிறது…..

வியாழன், 28 ஏப்ரல், 2016

நானா இல்லை !


இனிய கவிதை உலா
ஏதோ…… ஏதோ…
கிறுக்கியதை
கவிதை என்றார்கள்!

கவிதை ஆனதால்…
என்னையும்………
கவிஞன் என்றார்கள்!

திங்கள், 18 ஏப்ரல், 2016

கற்பனையும் ஏதுமில்லை!

கற்பனையும் ஏதுமில்லை!
கற்பனையும் ஏதுமில்லை !
கானகத்து குரங்குகளுக்கு
கவலைகள் ஏதுமில்லை!
வானத்து பறவைகளுக்கும்
வஞ்சமும் ஏதுமில்லை !
துள்ளியோடும் மீன்களுக்கோ
துளி-கவலை ஏதுமில்லை
கள்ளமில்லா குழந்தைகளுக்கு
கற்பனையும் ஏதுமில்லை !

நானிலத்தில் வாழ்வோருக்கே
நால்வகையாய் கவலைகளுண்டு!
நானே நல்லவன் நானே வல்லவன்
வீணே புலம்பி பொருமுகின்றான்

கவலைகளும் இல்லாமல்
வஞ்சகமும் இல்லாமல்
களித்திருப்போம் நாமெல்லாம்
காலங்கள் ஏதுமில்லையே !

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

இருபதிலும் அறுபதிலும்


இருபதிலும் அறுபதிலும்இருபதிலும்..ஆறுபதிலும்
இறுமாப்போடு எகிறுவான் இருபதில்
அறுபதிலோ அடங்கி அமைதியாவான்!
மீசையை திருத்துவான் இருபதில்!
ஆசையைத் திருத்துவான்! அறுபதில்
பெண்ணின் பின்போவான் இருபதில்!
பெண்ணுக்கு துணையாவான் அறுபதில்!


இணைக்காக ஏங்குவாள் இருபதில்
துணையாய் இருப்பாள் அறுபதில்!
ஆசையாய் தேடுவாள் இருபதில்!
ஆளுமைத் தேடுவாள் அறுபதில்!
ஆணின்பின் போவாள் இருபதில்!
அரவணைப்பாள் ஆணை அறுபதில்
இருபதிலும்…அறுபதிலுமாக… ஆண்…பெண்..!
இதெல்லாம் இயல்பாய் நடக்கிறதே!

--- கே. அசோகன்.
இருபதிலும் அறுபதிலும்

ஞாயிறு, 27 மார்ச், 2016

குடையின் ஆதங்கம் !

இனிய கவிதை உலாவெயிலில் !
கறுக்காமலிருக்க
என் நிழலில் நீங்கள்

மழையில்
நனையாமலிருக்க
எனக்குள் நீங்கள் !


சனி, 12 மார்ச், 2016

நான் யார் ?

நான் யார்?”
                                                           
நான் யாரென்றே?
கேட்டேன்

தாயும்தந்தையும்
மகன்  என்றார்கள்

மனைவியோ..
எனக்கே எனக்கான
மணாளன் என்றாள்

மகனோ….
பாக்கெட் மணிக்கான
ஏடிஎம் என்றான்

பேரன்பேத்தியோ
தாத்தா என
தாவி வந்தார்கள்.

உறவுகள்
ஆளுக்கொரு
உறவினை சொல்ல…..

ஆத்திகன்
பக்தனாக்கினான்

நாத்திகன்
பகுத்தறிவு பட்டறையில்
சேர்த்துக் கொண்டான்

குழப்பமோகுழப்பம்
எனக்கு….

கடைசியில்….
நானே
நான் யார்?என்ற
கேள்வியில்
கரைந்தவுடனே
நான் யார்?”
என்பதில்
நானைஅறுத்து விடு
நான் யார்? நீ யார்?
தெரிந்து விடும்
என்றது
அந்தநான் யார்”?

                      ----கே. அசோகன்.

      


விஷமே வரலாறாய் !

 விஷமே வரலாறாய் !

யுதாசின்
விஷவிதைகள்
சிரஞ்சிவியாய்
ஏசுவின் கருணை!

துணை புரிந்தன
சாக்ரடிஸ் சாவதற்கு!
வாழ்கிறார் வரலாறாய்

ஏழைக்கு வறுமை
சான்றோருக்கு சரிவு

என்றும் சஞ்சீவியாய்
காதல் தோல்வி!

எண்ணங்களே
விஷவிருட்சங்கள்
ஆகும்போது
விஷமெதற்கு?

நாகத்தின் நஞ்சு
விலை மதிப்பானதே!
அடுத்தவரை
தீண்டாத வரையில்!

விஷமாய்
மத துவேஷங்கள்!
மடிவது என்னவோ
மனிதர்களே!


n  கே. அசோகன்.

செவ்வாய், 8 மார்ச், 2016

விடுமுறை !

ஆசை
அரக்கனுக்கு
விடுமுறை அளி!
ஆகலாம்
புத்தராக!

எனை சுமந்தவள்
விடுமுறை
கேட்டிருந்தால்
இன்றுநான்”?பள்ளியறைக்கு
என்றென்றும்
விடுமுறையோ
முதிர்கன்னிகள்!

தேர்தலில்
வெற்றி
தொகுதிக்கு
விடுமுறை!

வீட்டு தலைவிகளுக்கு
விடுமுறை!
முகத்தில் முட்புதர்
ஆண்கள் !

யுகயுகமாய்
விடுப்பே இல்லாத
இதய உணர்வு
காதல்!

சூரியனும்காற்றும்
விடுமுறை!
பூமிப்பந்து புஸ்வாணமாய்!

கே. அசோகன்.


வியாழன், 18 பிப்ரவரி, 2016

பிரபஞ்சத்தின் பிரதியல்லவோ !

பிரபஞ்சத்தின் பிரதியல்லவோ!
கண்ணன் என்றாலே
கற்கண்டாய் இனிக்கும்
பெண்களுக்கு!
என்ன செய்தான்
அந்த மாயக் கண்ணன்!

கையிலே கோல்
ஆநிரை மேய்ப்பதற்கு
கூடவே ஒரு குழல்
அந்த குழலை
வாசிப்பதே இல்லை!

வாசிக்காத குழுலின்
கானத்தை காதில்
கேட்டதாகவே மயங்கி
விழுகின்றனர்
வனிதையர்கள்!
என்ன செய்தான்
அந்த மாயக் கண்ணன்

வெண்ணையை
திருடினான் மழலையில்
பெண்களைத் திருடுகிறான்
இப்போதும்…..
என்ன செய்தான்
அந்த மாயக் கண்ணன்!

பெண்கள் போதாதென்று
போகிகளையும்…..
யோகிகளையும்.
அல்லவா
பிடித்தே போகிறான்
என்ன செய்தான்
அந்த மாயக் கண்ணன்
காதல் அவனுக்கு
ஒரு விளையாட்டோ ?
பிரபஞ்சத்தின்
பிரதியல்லவா அவன்
அப்படித்தான் இருப்பானோ!

---- கே. அசோகன்.Related Posts Plugin for WordPress, Blogger...