இயற்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஏப்ரல், 2018

காவிரியே வந்துவிடு


                விரிகின்ற காவிரியே விழி திறக்க மாட்டாயா?
                                விவசாயிகள் துயரினை நீதுடைக்க மாட்டாயா?

காவிரியே வந்துவிடு
காவிரியே வந்துவிடு

                   குடகில் பிறந்தவளே! குளிராய் விரிந்தவளே!
         கன்னித்தமிழ் கரையோரம் நீஒதுங்க மாட்டாயா?
         அடகில் வைத்துவிட்டோம் மானம் போகுதம்மா!
         ஆடியிலே நீஆடியாடி வந்திடுவாய் என்றோமே!

      ஆண்டான்டாய் அழுகின்றோம் எம்குரல் கேட்கலையோ?
       அடிவயிறு நெருப்பாய் கன ன்றே எரியுதும்மா
      மீண்டுவருவாயோ ? மாளாத்துயர் தீர்த்திடவே!
      மேகம் கறுத்திட்டாலும் மழையேதும் போதலையே

      பிறந்தஇடம் குடகென்றாலும் புகுந்தவீடு தமிழ்தானே!
      சிறப்பாய் இருப்பாய் எனநேர்ந்து வழிபட்டோம்
       குறைகள் களைந்திடவே கனிவாய் வந்திடுவாய்
       கடல லைப் போல சீறியே வந்திடுவாயே!


ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

தாயன்பில் மாற்றமில்லை


நிலவின் ஒளியில் மாற்றமில்லை
                                நெளிந்தோடும் நதியில் மாற்றமில்லை
                                உலவிடும் காற்றினில் மாற்றமில்லை
                                ஓடும்மேகங்களில் மாற்ற மில்லை

சனி, 30 டிசம்பர், 2017

நதிநீர் பிரச்சினை

நதிநீர் பிரச்சினை
               ஆனந்தம் கொள்வோம் ஆனந்தம் கொள்வோம்
                                   புத்தாண்டு பிறந்த்தென ஆனந்தம் கொள்வோம்!

செவ்வாய், 19 டிசம்பர், 2017

நிலாச் சோறு-

                    முற்றத்து நிலா ஒளிவெள்ளம் பாய்ச்ச
                                                மொட்டை மாடியில் வட்டமாய் அமர
                                                வற்றாத குளத்துநீர் காற்று பாய்ந்துவர
                                                விண்மீன்கள் அதனில் துள்ள துள்ள
                                                சற்றும் குறையா போட்டியாக தான்
                                                சரசரவென துள்ளியோடும் மீன்களும் ஓட
                                                சற்றும் மனம்கோணா தாயவளும் தட்டில்
                                                சாதத்துடன் குழம்பூற்றி கையில் தந்தாள்!
 
நிலா சோறு  கவிஞர் கே. அசோகன்
நிலா சோறு- கவிஞர் கே. அசோகன்

வியாழன், 7 செப்டம்பர், 2017

அனிதாவுக்கு கவிதாஞ்சலி

              மருத்துவர் கனவு மண்ணானதுஅரும்பு
                                மலரொன்று மண் போனது!
                                கருத்தாய் படிப்பு வீணானதுகாலம்
                                காலனை உடன் சேர்த்த்து
அனிதாவுக்கு கவிதாஞ்சலி
புகைப்படத்தை கிளிக் செய்தும் படிக்கலாம்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

நதிக்கு பாடலா ?

நதிக்கு பாடலா ?

          உனை தேடி அலைகின்றோம் உயிர் வாழவே                          
        ஓடோடி வருவாயா ? மண்மீது  எமைத் தேடியே !

http://kavithaigal0510.blogspot.com
நதிக்கு பாடலா ?

ஞாயிறு, 30 ஜூலை, 2017

நதியோர நாணல்

         நதியோர நாணல்
           நதியோரத்து நாணலை
            எள்ளி   நகையாடியது
           அருகிலிருந்த
           நெடிதுயர்ந்த மரம்

சனி, 6 மே, 2017

வலசை போகா வண்ணத்துபூச்சி

                     வண்ணமய தொலைக்காட்சி
                                                வடிவழகில் மயங்கி நின்றோம்!
                                                எண்ணற்ற ஏவுகணைகள்
                                                ஏவுகின்றோம் நாளுமே
வலசை போகா வண்ணத்துபூச்சி
வலசை போகா வண்ணத்துபூச்சி

சனி, 25 பிப்ரவரி, 2017

ஜன்னல் நிலா

பண்ணிசை பைந்தமிழ் கவிஞர்கள் தாம்
            பால்நிலவை பாடாதவர் எவருமுண் டோ?
            விண்ணிலே மின்னுகின்ற நிலவின் ஒளியில்
            வனிதையர்கள் ஏக்கத்திலே மூச்சு விட்டே
            ஜன்னலிலே கன்னம்வைத்தே காத்தி ருக்க
            ஜன்னலதில் எட்டியே பார்த்திடு வாய்!
            விண்ணிலே உயரமாய் இருந்த போழ்தும்
            வனிதையரை ஏன்தானோ வாட்டு கின்றாய்


ஜன்னல் நிலா
ஜன்னல் நிலா -படத்தை சொடுக்கி படிக்கலாமே


செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சூரியன்-கவிதை

ஆதித்தியன்
                   வேதம் ஓதுவோர்க்கு….
 
kavithaigal0510.blogspot.com
சூரியன்-கவிதை

புதன், 14 செப்டம்பர், 2016

ஓடுதென வரலாறு

காவிரி தென்பென்னை பாலாறு
கணக்காய் ஒடுதென வரலாறு!
தேவையின் அளவை கூறிடின்
தடியடி கலவரத்தில் சிலபேரு
காயம் பட்டவர்கள் பலபேரு
கண்ணீர் வடித்தவர்கள் சிலநூறு
நியாயம் நேர்மை என்பதெலாம்
நொடியில் மறைந்து போனதுவே!


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வைரமயமாய்

முக்கால் சதவீத நீராய்
இந்த பூமி !
முக்கால் சதவீதம் நீராய்
இருப்பதும் நாம் !
http://kavithaigal0510.blogspot.com
வைரமயமாய்
படத்தை சொடுக்கி இரசிக்கவும்

சனி, 12 மார்ச், 2016

கடல் !

கடல்

பூமித்தாய்
போர்த்திய
நீல நிற
பட்டு சேலை!
                       
காதலர்களின்
வேடந்தாங்கல்!
மீனவர்களின்
அமுதரசுரபி!

சுண்டல் சிறாரின்
பசியாற்றும் தாய்!

இயற்கை அன்னை
ஆபரணங்களை
பாதுகாக்கும்
அழகுப் பெட்டகம்!

அவ்வப்போது
ஆர்ப்பரிக்கும்
அமைதி பூங்கா!

சீறுவதும்
சிணுங்குவதும்
எப்போது?
நீயும் பெண்தானோ?n  கே. அசோகன்.

செவ்வாய், 8 மார்ச், 2016

தொடர் நட்பு !

தொடர் நட்பு

கடலின் நட்பு
வானம்!

வானத்தின்
நட்பு
மேகம்!

மேகத்தின்
நட்பு
மழை!

மழையின்
நட்பு
விளைச்சல்!

விளைச்சல்
நட்பு
பூமி!

பூமியின்
நட்பு
விவசாயி!

விவசாயின்
நட்பு
உணவு!

உணவின்
நட்பு
உடல்!

உடலின்
நட்பு
உணர்வு!

உணர்வின்
நட்பு
உயிர்!

உயிரின்
நட்பு
ஐம்பூதங்கள்!

ஐம்பூதங்கள்
நட்பு
இயற்கை!

இயற்கை
நட்பு
இறைமை!
Related Posts Plugin for WordPress, Blogger...