இனிய கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஜூன், 2018

அவன்தானே படைப்பாளி


அவன்தானே படைப்பாளி-
ஏதோ…… ஏதோ
கிறுக்கியதை
கவிதை என்றார்கள்!

கவிதை ஆனதால்
என்னையும்………
கவிஞன் என்றார்கள்!
kavithaigal0510.blogspot.com
அவன்தானே படைப்பாளி-இனிய கவிதை உலா

வியாழன், 12 ஏப்ரல், 2018

எழில் தமிழழகைப் பாடிமகிழ வேண்டும் - தமிழ் புத்தாண்டு கவிதை


சீறிவரும் கடல லையில் கால் நனைத்தே
                சித்திரையில் முழுநிலவு கண்டு மகிழ்வோம்
                தூறிடும் சாரல்தேடி  சென்றே தான்
                தூய்த்திடவே துடித்திடுவோம் இன்ப மதை
                சாறினையே குடித்துதான் தாகம் போக்கி
                சத்தான பழங்களையே சாப்பிடு வோம்!
           கூறிடுவோம் கதிரவன் வெம்மை அதிகமே!


       கதிரவனின் வெம்மையை தணித் திடவே
       காணுமிட மெங்கிலும் மரம்வளர்ப் போமே!
       புதிதாக பிறந்துள்ள புத்தாண்டு தன்னில்
       பொலிவோடு புத்தாடை அணிந்தே தான்
       எதிர்வரும் நாட்களிலே இனிமை நிழல்
       என்றுமே நிலைத்திட செடியும் நடுவோம்
       குதிரையாய் ஓடியோடி உழைத்த நாளில்
       கொண்டிடுவோம் கோடையிலே ஓய்வு தானே!

       மண்மணக்க பயிர்கள் வளர்தல் வேண்டும்
       மலர்வகைகள் பூத்தே குலுங்க வேண்டும்
       உண்ணும்  பொருள் தந்துதவும் உழவர்
       உயர்ந்திடவே கரங்களை தந்திடு வோம்
       எண்ணும் சிந்தையிலே எல்லா மாய்
       எழில்தமிழ ழகைப் பாடிமகிழ வேண்டும்!
       பண்ணோடு பாவாக இணைதல் போல
       பண்பாடி நாளும்தான் மகிழ்ந்தி டுவோமே!

தமிழ் புத்தாண்டு கவிதை யூடியுபிலும் காணலாம்

ஞாயிறு, 11 மார்ச், 2018

பெண் எனும் பிரபஞ்சம்

                          
இயற்கையில் எல்லாம் பெண்மை
                                எதில்தான் இல்லை பெண்மை தன்மை
                                வயலின் கதிரில்நெற்கள்பெண்மை!
                                வானில் உலவும் நிலவில் பெண்மை!
பெண் எனும் பிரபஞ்சம் 

வெள்ளி, 26 ஜனவரி, 2018

இசைக்கு என்றும் நீ மன்னன்! -இளையராஜா


              தேனியில் மலர்ந்த பூவிது!
                                தேனிசை கீதம் தருவது!
                                ஊனினை உருக்கும் உளமிது
                                ஊற்றாய் அமுதாய் இனிப்பது!
இசைக்கு  என்றும்  நீ மன்னன்! -இளையராஜா
இசைக்கு  என்றும்  நீ மன்னன்! -இளையராஜா

செவ்வாய், 16 ஜனவரி, 2018

”பொங்கலோ பொங்கல்”

              ஏர்முனை வாழ்க்கை ஏற்றம்பெற
                                இருகரம் நீட்டி வரவேற்போம்!
                                உழவர்களை !
                                அவர்களும்நாமும் வாழவே!
          
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
                         

திங்கள், 27 நவம்பர், 2017

அரியாசனம்- தினமணி கவிதைமணி தந்த தலைப்பில்

அரியாசனம்- கவிதைமணி
                                சித்தார்த்தன் அரியணை துறந்த தாலே
                                சீர்மிகு புத்தனென்றே புகழ் பெற்றார் !
                                பத்துதிங்கள் சுமந்தவள் கரு வறையும்
                                பாரினில்  சிறந்த அரியணை யாம்!
                                கத்துங்கடல் ஆழத்திலே மூழ்கி யுள்ள
                                கடற்சிப்பி  முத்துதனின்  அரியணை யாம்!
                                கானகுயில் இடுகின்ற  மூட்டைக்கு தான்
                                காகத்தின் கூடே நல்ல அரியணை  யாம்!
அரியாசனம்
அரியாசனம்

வெள்ளி, 3 நவம்பர், 2017

கருப்பும் சிவப்பும்

கருப்பும்சிவப்பும்
கரியநிற பொருட்களையே கண்டு விடின்
காத தூரம் ஓடிடுவான் கார்மேகம் தான்
கரும்மேக கூட்டத்தை காணா மலே
கூட்டுப் பறவையென முடங்கி டுவான்
கருமைநிறக் கண்ணனின் எழிலைக் கூட
கண்கொண்டு பார்க்கவே தயங்கி டுவான்
கரியநிற வேழத்தின் அருகில் கூட
கணநேரம் நிற்காமல் நகன்றிடு வானே!
இனிய கவிதை உலா
கருப்பும் சிவப்பும்

கரியநிற மென்றாலே ஏனோ கார்மேகம்
காத்தூரம் ஓடுகின்றாய் என்றே வினவி
கரியநிற குயில்தான் அழகாய் கூவும்!
காதோரம் அதனினிமை நன்றாய் கேட்கும்
கரியநிற காக்கையே பகிர்ந்(து) உண்ணும்
கருத்தாக சொன்னால் காதிலே விழாது
கரியநிற பெண்ணொருத்தி கண்ட ஓர்நாள்
கருப்பியென கேலிசெய்து ஒதுக்க லானான்

 கரியநிற மேகம்சூழ் மாலைப் போழ்தில்
 கானகத்து மலைப் பாதை தன்னில்
 சரிவான பாதையிலே சறுக்கும் போது
 சட்டென கரம்தந்தவள் கரிய நிறத்தாளே!
 அரிதான அந்திமஞ்சள் பொழுது தன்னில்
 அகண்டதொரு பள்ளத்திலே விழுந்துவிட
 சிரித்தே சிவந்தவள் கேலி செய்தாளே!
 நிறம்கருப்பின் நேர்மை தெரிந்த வானான்!திங்கள், 16 அக்டோபர், 2017

கூடுகள் தேடும் பறவைகள் தீபாவளி கவிதை

              நீண்டு கிடக்கும் சோக பாதையில்
                                நெளிந்தே வளைந்தும் போகின்றான்
                                வேண்டும் கடவுள்கள் எல்லாம்
                                வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
                                ஆண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
                                அதையே தீபாவளி என்றழைப்போம்
                                தீண்டா இன்பம் தேடும் ஏழைக்கோ
                                தீபாவளி விழா  தீராவலியாகும்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஊர்சுற்றினார்


ஒரு மூக்கு கண்ணாடி
 ஒரு முழத்துண்டு
 இடையில்
ஒரு ஊன்றுகோல்
 நடக்க
இதுவே அடையாளம்
மகாத்மா காந்திக்கு
ஊர்சுற்றினார்
சுதந்திரம் பெற்றுத்தர

இப்பொழுதும் ஊர்சுற்றுகிறார்
பணமென்னும் தாள்களின் வழியே !
 --கே. அசோகன்.

வியாழன், 5 அக்டோபர், 2017

புதிய ஓட்டம்-கவிதைமணி

புதிய ஓட்டம்-கவிதைமணி
திணமனி  வலைத்தளத்தில் பதிந்து மீள்பதிவு
                                புலர்பொழுதின் காலையிலே கதிர் பரப்பும்
                                பகலவன் பயணமும் பூங்காவின் உள்ளே
                                மலரொன்றைத் தழுவி புத்துணர்வை ஊட்ட
                                மணம்தான் எங்கும்வீச புதிய ஓட்டமாமே!

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

அரைக்கரண்டி நெய்யதிகம்

            கோள்திரியும் வானத்தை எட்டு வதற்கு
            குறும்பலகை மீதேறி போக லாமோ ?
            தோள்துவண்டு  மெலிந்துள்ள வாலிப னோடு
            தொடைதட்டி சண்டை யிடுதல்  முறையோ?
                                நாள்பார்த்து நட்சத்திர வேளைப் பார்த்து
அரைக்கரண்டி நெய்யதிகம்
அரைக்கரண்டி நெய்யதிகம்

வியாழன், 28 செப்டம்பர், 2017

முத்தம்போல் இனிக்கும்

முத்தம்போல் இனிக்கும்
           முத்தம்போல் இனிக்கும்சொல் வேறி ல்லை
                        முழுநிலாபோல் ஓளிதரும் விளக்கு மில்லை
                        த்தைப்போல பேசுகின்ற பறவை யில்லை
                        தென்றல்போல் சுகம்தரும் காற்று மில்லை
                        புத்தகம்போல நல்லதொரு தோழ னில்லை
                         பொன்போல பெண்கவரும் நகையி ல்லை
                        கத்துங்கடலென ஆர்ப்பரிக்கும் ஓசை யில்லை
                        கன்னித்தமிழ்போல்  இனிக்கும் மொழி யில்லை
          
முத்தம்போல் இனிக்கும்
முத்தம் போல் இனிக்கும்

திங்கள், 18 செப்டம்பர், 2017

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ச்சும்மா தமாஷ் கவிதை

              அ-ன்னா ஆன்னா ஆடிப்போனா ஆவணி !
                                -ன்னா தாவன்னா தமன்னா போட்டா தாவணி!
                                -ன்னா இயன்னா ஐப்பசி போனா கார்த்திகை!
                                இலியான்னா பேசினா தமிழ் வார்த்தைகள்!
                                -ன்னா -வன்னா ஊருக்கு போனா ஊர்மிளா!
                                ஊருக்குள்ளாற நல்லதொரு தேர்விழா!
                                -ன்னா -வன்னா எதிர்த்த வீட்டு கோமளா!
                                இழுத்துகிட்டு ஓடினா உங்களுக்கு கோபமா?
                                -ன்னா ஐயன்னா ஜன்னலோரம் பொண்ணுதான்!

                                ஜன்னலோரம் பொண்ணுமேல ஐயாவுக்கு கண்ணுதான்
ச்சும்மா தமாஷ் கவிதை
ச்சும்மா தமாஷ் கவிதை
குறிப்பு- கவிஞர் பெருமக்கள் கோபம் கொண்டு ஏவுகணைக் கவி்தைகளை செலுத்தி விடாதீர்கள் 

புதன், 12 ஏப்ரல், 2017

சித்திரைப் பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை)

சித்திரை பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை)
சித்திரை பெண்ணே

திங்கள், 27 மார்ச், 2017

விரல்கள் மட்டும்

              பசுமையைக் காணா
                                கண்கள்!
                                புல்வெளியை
விரல்கள் மட்டும்
விரல்கள் மட்டும்

திங்கள், 16 ஜனவரி, 2017

பூமழையும் பனிபொழியும்

              அறிஞர்கள் காட்டுகின்ற பாதை தன்னில்
                     அடியொற்றி  வைக்கவே தயங்க லாமோ?                       
                             வறியவர்கள் உள்ளதோர்  நாடே என்றே
                             வக்கணையாய் கேலிசெய்யும் மாந்த ரிடை
                            அறிஞர்கள் உள்ளரென எடுத்து  சொல்லு
                            கண்டறிந்து, கேட்டறிந்து கல்வி கற்று   
                            அறிவை  இந்நாட்டில்  வளர்த்து  கொண்டு
                           அயல்நாட்டு வேலைத்தேடி ஓடலா  மோ?
                        
பூமழையும்  பனிபொழியும்
பூமழையும்  பனிபொழியும்   
                       

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு கவிதை


            மார்கழி மாதம்-புத்தாண்டு 2017 கவிதை

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

எல்லைக்கோடு

அன்னை யென்ற சொல்லுக்கு முன்னாலே
அகிலத்தில் தெய்வமும் இல்லை அன்றோ !
பண்பினையே பாசத்தோடு கலந்தே ஊட்டி
பண்பாட்டை பேணுகின்ற பெரும் செயலை
என்றென்றும் செய்தேதான் மகிழ்ந்து வாழ்ந்து
இன்னலுடன்  இடையூறுகள்  வந்த போழ்தும்
அன்பைத்தான் அள்ளியள்ளி வழங்கு வதிலே
அவளென்றும் இட்டதில்லை எல்லைக் கோடே!


செவ்வாய், 8 மார்ச், 2016

சங்கீதம் !

   
 சங்கீதம்
சுரங்களின்
அணிவகுப்பு
மார்கழி
மாதத்தின்
மகோத்சவம்!

ஏழு எழில்
தேவதைகளின்
கொலுசு சத்தம்!

இறைவனைக்
கட்டிப்போடும்
எளிய மந்திரம்!

கவலைகளைக்
களையும்
செலவில்லா
வைத்தியம்!

தாயின்
இதயதுடிப்பே!
எனக்கு பிடித்த
சங்கீதம்!
கருவறையில்
கிடந்தபோது..!

n  கே. அசோகன்.Related Posts Plugin for WordPress, Blogger...