ஞாயிறு, 10 ஜூன், 2018

அவன்தானே படைப்பாளி


அவன்தானே படைப்பாளி-
ஏதோ…… ஏதோ
கிறுக்கியதை
கவிதை என்றார்கள்!

கவிதை ஆனதால்
என்னையும்………
கவிஞன் என்றார்கள்!
kavithaigal0510.blogspot.com
அவன்தானே படைப்பாளி-இனிய கவிதை உலாபல கவிதைகள்
புனைந்ததாலே
கவி வேந்தன்
என்றார்கள்

கவி வேந்தன்
என்றவுடனே….
வேந்தனுக்கே உரிய
கர்வமும் கூடவே
கௌவிக் கொண்டது

கர்வத்துடனே
தாறுமாறாய்
பற்பல கவிதைகள்
புனைந்ததால்..
கூடிப் போனது
எண்ணிக்கையில்..!

எண்ணிக்கையில்
கூடிப்போன
கவிதைகளில்
காணாமற் போன
உயிரோட்டத்தை
உயிரரூட்டினான்!!
ஒருவன்!

அவன்…..
கவிஞனமில்லை!
புலவனுமில்லை!
கம்பனுக்கே
எடுத்து கொடுத்தவன்
போலவே எனக்கும்
ஒருவன்!
அவன்தானே படைப்பாளி!

----- கே. அசோகன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...