ஞாயிறு, 13 மே, 2018

கன்னத்தில் விழாது
           அன்னமிடும் போது
                          அன்பையும் பரிமாறுபவள்
           கண்ணீல் நீர்த்துளித்தாலும்
           கன்னத்தில் விழாது காப்பவள்!
kavithaigal0510.blogspot.com
கன்னத்தில் விழாது

           தூரம் தொலைவென்றாலும்
           தொடரும் அவள் நினைவுகள்
           பாரம் ஒரு பொருட்டல்ல
           பாசத்தால் அதை குறைப்பவள்!

           மகான்களும் மறவா உறவு
           மாதா ஒன்றுதான் உலகில்
           ஆகா ! என்று புகழ வேண்டாம்!
           ஆகாதென்று தள்ளவும் வேண்டாமே!

           ---கவிஞர் கே. அசோகன்.
          
                               
          


6 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...