புதன், 4 ஏப்ரல், 2018

காவிரியே வந்துவிடு


                விரிகின்ற காவிரியே விழி திறக்க மாட்டாயா?
                                விவசாயிகள் துயரினை நீதுடைக்க மாட்டாயா?

காவிரியே வந்துவிடு
காவிரியே வந்துவிடு

                   குடகில் பிறந்தவளே! குளிராய் விரிந்தவளே!
         கன்னித்தமிழ் கரையோரம் நீஒதுங்க மாட்டாயா?
         அடகில் வைத்துவிட்டோம் மானம் போகுதம்மா!
         ஆடியிலே நீஆடியாடி வந்திடுவாய் என்றோமே!

      ஆண்டான்டாய் அழுகின்றோம் எம்குரல் கேட்கலையோ?
       அடிவயிறு நெருப்பாய் கன ன்றே எரியுதும்மா
      மீண்டுவருவாயோ ? மாளாத்துயர் தீர்த்திடவே!
      மேகம் கறுத்திட்டாலும் மழையேதும் போதலையே

      பிறந்தஇடம் குடகென்றாலும் புகுந்தவீடு தமிழ்தானே!
      சிறப்பாய் இருப்பாய் எனநேர்ந்து வழிபட்டோம்
       குறைகள் களைந்திடவே கனிவாய் வந்திடுவாய்
       கடல லைப் போல சீறியே வந்திடுவாயே!


16 கருத்துகள்:

 1. காவிரித் தாய் புகுந்த வீட்டிற்கும் வரட்டும்....

  நல்ல கவிதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. காவிரி வருவாள், நம் குறையைத் தீர்ப்பாள். தாய், பிள்ளைகளை என்றுமே விட்டுக்கொடுக்கமாட்டாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்புவோம் ஐயா, நம்பிக்கைதானே வாழ்க்கை

   நீக்கு
 3. பதில்கள்
  1. சீறிப்பாய்ந்து வரவேண்டிய காலம் ஒன்று உள்ளது அது நடக்கும்

   நீக்கு
 4. காவிரித்தாய் மனசு வச்சாலும் நம்ம அரசியல்வாதிகளும் மனசு வைக்கனுமே!

  அதுக்காகத்தானே இத்தனை போராட்டமும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை வைச்சுதானே அரசியல். இயற்கைதான் நம்மைக் காப்பாற்றும்

   நீக்கு
 5. சிறப்பு. உங்கள் கவி கேட்டேனும் மனமிறங்கி காவிரி வந்து சேரட்டும். வழி மீது விழி வைத்துக் காத்திருப்போம், காவிரி கரைபுரண்டோடி வரும் நாளுக்காய்....

  #088/2018/SigarambharathiLK
  2018/04/04
  அறம் செழிக்க வாழ்வோம்!
  https://newsigaram.blogspot.com/2018/04/ARAM-SEZHIKKA-VAAZHVOM.html
  பதிவர் : கவின்மொழிவர்மன்
  #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO
  #TAMIL #POEM #இயற்கை #NATURE #LIFE
  #சிகரம்
  #SigarambharathiLK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலான கருத்து வழங்கி ஊக்குவிப்பதற்கு மனதார நன்றி

   நீக்கு
 6. அணை கட்டித் தடுத்து விட்டார் ; அநியாயம் செய்து விட்டார். அதனாலே வரவில்லை. துயர் துடைக்க வழியில்லை!

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...