ஞாயிறு, 23 ஜூலை, 2017

எறும்பினை உற்றுப்பாரு

                             எறும்பினை உற்றுப்பாரு  சுறுசுறுப்பை சொல்லி தரும்!
                                கரும்பினை கடித்துபாரு  சுவையினை அள்ளி தரும்!


                               
                                சோம்பலில் கிடந்தால் செல்வம் சேர்ந்திடுமா?
           ஆம்பல் மலராய் அதிகாலை விழித்திடுவாய்
           வேம்பின் கசப்பும் நோயைப் போக்கிடுமே!
           வீழ்ச்சிகள் எல்லாம் வெற்றியாய் மாறிடுமே

           தடைகள் எல்லாம் சிறுதோல்விகள் அல்ல !
           தகர்த்தெறி  தோல்வியும் தொலைந்திடுமே!
           உடைபடும் கல்தான் படிக்கற்கள் ஆகுமே!
           உளிபடும் கல்லோ அழகுசிலைகள் ஆகுமே!

           வீட்டுக்குள் இருந்து வீரம் பேசல் அழகாமோ?
           வீரமென்பது களத்தில் விளைய நலமாமோ!
           காட்டினை அழித்து மழையை தேடல் முறையாமோ?
           காதல் என்றேகாமம்செய்தல் அழகாமோ ?

           ”நான்என்று சொல்வதை மறந்திடுவோமே!
           நாமென்று சொல்லியே மகிழ்ந்திடுவோமே!
           தேன்சுவையாய் வாழ்வை மாற்றிடுவோமே!
           தேசத்தை இருகண்ணென போற்றிடுவோமே!


           கவிஞர் கே. அசோகன்

10 கருத்துகள்:

 1. அருமை நண்பரே தன்னம்பிக்கை விளையும் வரிகள் நன்று
  த.ம.+1

  பதிலளிநீக்கு
 2. வாழும் கலையை வரிகளில் கண்டேன் :)

  பதிலளிநீக்கு
 3. தன்னம்பிக்கை கவிதை,வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியும் நன்றியும்

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...