வியாழன், 13 ஜூலை, 2017

உன்னத வாழ்வு

வீணையின் நரம்புகள் இறுக்கமானால்
நாதமும் நன்றாய் ஒலித்திடுமே!
வீழ்பவனுக்கு நம்பிக்கை துணையானால்
வெற்றிகள் என்றும் கிட்டிடுமே!
http://kavithaigal0510.blogspot.com
உன்னத வாழ்வுகூணலாய் கும்பிட்டு வாழ்ந்திட்டால்
கோரிக்கை தன்னால் வென்றிடுமோ ?
கோணல் வழியில் சென்றிட்டால்
குவலயம் நம்மை இகழ்ந்திடுமே!

குளத்தின் கரையில் நின்றிருக்கும்
கொக்கின் தேவை மீன்கள்தான்!
உளத்தின் உண்மைச் சேர்த்திட்டால்
உன்னத வாழ்வு பெற்றிடலாமே!

துணையாம் கட்டிடத்திற்கு தூண்தானே
தாங்குவதில் துன்பம் அதற்கில்லை!
வீணாய் வாழ்வில் நின்றிருந்தால்
வீழ்வது எளிதாய் நிகழ்ந்திடுமே!கவிஞர் கே. அசோகன்.

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இரசித்து கருத்து வழங்கியதற்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. உன்னத வாழ்வுக்கு நீங்கள் சொன்ன உன்னத வரிகளை ரசித்தேன் ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்னத வரிகளை ரசித்த தங்களுக்கு வணக்கத்துடன் நன்றி

   நீக்கு
 3. உண்மையாய் இருந்திட்டால் உன்னத வாழ்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திட்ட தங்களுக்கு மனப்பூர்வ நன்றிகள்

   நீக்கு
 4. எப்படியாவது உன்னத வாழ்வு கிடைத்தால் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...