திங்கள், 19 ஜூன், 2017

பூக்களின் சங்கமமோ?

பொட்டு வைத்த
பூமேனி பெண்ணின்
புன்னகையோ
முல்லைப் பூக்கள்
 
பூக்களின் சங்கமமோ ?
பூக்களின் சங்கமமோ ?

இங்கும் அங்கும்
துள்ளியோடும்
இமைவிழிகளோ
கருநீல பூக்கள்!

தெவிட்டாத தேனமுதாய்
தேன்சுரக்கும்செவ்விதழ்களோ
செண்பக பூக்கள்!

நாவினில் நற்றமிழ்
நாட்டியமாடுகையில்
பன்னீர் ரோஜா பூக்கள்!

மோகத்தோடு இழையோடி
மூச்சுக்காற்றை வெளியிடும்
மூக்கோ
எள்ளின் பூக்கள்!

நல்முத்து நற்றமிழாள்
கழுத்தோவெண்ணிற
சங்கு பூக்கள்!

தடம்பார்த்து நடக்கின்ற
தளிரான கால்களோ
வாகான வாழைப்பூ

மின்னலை துணைக்கழைத்து
துடித்திட வைக்கும் இடுப்பு!

பூக்களின் மொத்தமாய்
பூத்திருக்கும் பெண்ணழகே
காட்ட கூடாதா ?
ஆழமான அன்பு !

---- கே. அசோகன்.

22 கருத்துகள்:

 1. அருமை நண்பரே வார்த்தைக் கோர்வைகள் அழகூட்டின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்து வழங்கி ஊக்குவித்து வருவதற்கு மிக்க நன்றி

   நீக்கு
  2. த.ம.லிங்க் தவறு சரி செய்யவும்

   நீக்கு
  3. தற்பொழுது சரி செய்திருக்கிறேன். இப்போது முயற்சி செய்து பாருங்களேன்

   நீக்கு
  4. தமிழ்மணம் சப்மிட் செய்யப்படவில்லை என்றே எனக்குக் காட்டுகிறது.

   நீக்கு
  5. தற்பொழுது சரி செய்திருக்கிறேன். முயற்சித்து பாருங்களேன்

   நீக்கு
  6. மன்னிக்கவும். இன்னும் அதே நிலைதான்!

   நீக்கு
  7. மாதிரிக்கு நான் முயற்சித்தேன். இப்போது வரும்போல தெரிகிறது. சற்று நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்களேன்

   நீக்கு
  8. வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. டெம்ப்ளேட் மாற்றம் செய்த தால் ஏற்பட்ட கோளாறு. சிரமத்திற்கு மன்னிக்கவும்

   நீக்கு
 2. பதில்கள்
  1. ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 3. பூக்களின் மென்மை இப்படியா செய்வது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் வாலி அவர்கள் ஒரு பாடலை இப்படி எழுதி இருக்கிறார். அது போலவே இதுவும் ஒரு வகை

   நீக்கு
 4. வாழைப்பூ கால்களா?!

  ஒருவேளை கால் கருப்பா இருக்குமோ1!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் நன்றி மென்மைகுறிக்கவாழைப்பூ

   நீக்கு
 5. வணக்கம் நண்பரே
  உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
  வாழ்த்துக்கள்
  discount coupons

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 6. பதில்கள்
  1. மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

   நீக்கு
 7. அருமை கவிஞரே ! 'பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ' - பாடல் நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...