வியாழன், 29 ஜூன், 2017

மழலையின் மடல்

பாசத்தோடு கலந்த புன்னகை முகத்தோடு  கைநீட்டி அழைத்தாள்….. பசியில் இருந்த நான் ஆவலோடு தாவி அவள் மடிபுகுந்தேன். மார்போடு இருகரங்களால் அணைத்தாள். அந்த அணைப்பு அன்பின் அணைப்பென ஆனந்தத்தில் திளைத்தேன். இருந்தாலும்…. அந்த ஆனந்தம் பசியில் மயக்கத்தால் மாயமானது.

மழலையின் மடல்
மழலையின் மடல்

                மார்பில் வாய் வைத்து அவசர..அவசரமாக உறிஞ்சினேன். பாலமுதாய்  சுரந்தது. எப்போதும்போல அமுதத்தை அருந்தினேன்.
                  பாலருந்தும்போதே, என் கண்கள் செருக துவங்கியது. வழக்கமாய் பாலருந்தும் போது வரும் தூக்கம்தானே. ஒருவேளை தூக்கத்தில் விழுந்து விட்டால்.. ”சே ! விழுந்து விடுமளவு விட்டுவிடுவாளா ? ” கரங்களில் பூப்போல பொத்திபொத்தி வளர்ப்பவள்தானே. இருந்தாலும் அன்று ஏனோ  மார்புதுணியை இறுக பற்றிக் கொண்டேன்.
                 அவள் கண்களில் துக்கம் தெரிந்தது. விழியோரம் சின்னசின்னதாய் நீர்த்திவளைகள். இதுவரை நான் பார்த்த்தில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதனால் கைகளை அசைத்தசைத்து சிரித்து மகிழ்வதை மறந்தேன்.
                மனசுக்குள் மருகிக்கொண்டே இருந்தாள். அவளுடைய நினைப்பு….. என்னுடைய நுண்ணுனர்வை மின்னலாய் தாக்கியது. ஏதோ நிகழப்போகிறது  புரிந்தும்….புரியாமல் இருந்தது. உணர்வுகளின் கீற்றுகளில் அது வெளிப்பட்டது.
                 இதோஎன் கண்கள் மூடிக்கொண்டிருக்கின்றன. வீட்டில் உள்ள எல்லோரும், நான் அம்மாவிடம் பாலருந்துகிறேன் என்று பாராமுகமாய் இருந்தார்கள்.

       மார்போடு அணைத்துக்கொண்டிருந்தவள்….அணைத்தாள்அணைத்தாள் அணைத்தாள். அந்த அணைப்பு……என் எதிர்கால வாழ்க்கையின் வெளிச்சத்தை அணைக்கும் அணைப்பென உணர்ந்தாலும் வாய்திறந்து சொல்ல இயலவில்லை.  அந்த இறுக்கத்தில்…..  பாலருந்திய பயணம் மீளாத்துயிலில் ஆழ்த்தியது.  ஏனென்றால்….நான் ஒரு பெண் பிள்ளையாம்… அவளும் பெண்தானே!

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இது ஒரு உண்மை நிகழ்வி்ன் வெளிப்பாடான கதை. மனதை உருக்கி விட்டது.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம்,மிகவும் மனம் சங்கடப்படுகிறது. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 4. ஒரு சோக நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக உணர வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிகழ்வை படித்தவுடன் மனதை சங்கடப்படுத்தியது. அந்த உணர்ச்சியை வார்த்தைகளில் வடித்து விட்டேன். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 5. நிஜக்கதையா?! இப்படியுமா நடந்தது?! பாவம் அந்த தாய்..... பிஞ்சு தப்பிவிட்டது... கேடுகெட்ட தகப்பனிடமிருந்து...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், செய்தி தாளில் வெளியான உண்மை சம்பவம், மனம் கஷ்டப்படுகிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 6. பதில்கள்
  1. ஒரே வார்த்தையில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 8. மழலையின் மடல்
  எல்லோர் உள்ளத்தையும் தொடுகிறதே!

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...