வியாழன், 25 மே, 2017

சுரேந்திர வாலுபுலி

முல்லைமகிழ் இராஜ்யத்தில் கோலோச்சி கொண்டிருந்த ராஜமாதா, புத்திரன் தனது கனவை நிறைவேற்றுவான் எதிர்பார்த்த நேரத்தில்தான்சேட்டை செயலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் வாசலில் நின்று கொண்டிருந்தான்.
http://kavithaigal0510.blogspot.com
சுரேந்திர வாலுபுலி 

                  அவனை உள்ளே வரச்சொல்வதா ? வேண்டாமா ? என உத்திரவிடுவதற்கு, அனைத்து அதிகாரங்களும் இருந்த ராஜமாதா அதைச் செய்யாமல், நட்டநடு சபையில் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை  செய்தாள்.
                   ஆளுக்கு ஆள் புகார் பட்டியல் வாசித்தார்கள்.
                   ”இராஜமாதா, சுரேந்திர வாலுபுலியின் சேட்டைகளும், தொல்லைகளும் தாங்க முடியவில்லை. அவனின் வாலுத்தனத்திற்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது. தாங்கள்தான் கண்டித்து வைக்க வேண்டும். என்று ஒருவர்.
                    ”அம்மா, அவனின் தொல்லை தாங்க முடியவில்லை, தண்ணீர் எடுக்க போகும் போது, பின்னாலேயே வந்து கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடிவிடுகிறான். இப்படி பருவ பெண்களின் குரல்கள்.
           
                   ” என்னங்க பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ? உங்கள் பிள்ளையின் சேட்டைத்தனம் அதிகரித்து விட்டது. எங்கள் ராஜ்யத்தின் எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள சோலைகளில் காய்த்து தொங்கும் மாங்கனிகளையும், பழவகைகளையும் கல்லால் அடித்து சேதப்படுத்துகிறான். அதுவும் தனியாளாக வருவதில்லை. அவன் பின்னால் ஒரு பத்து பதினைந்து வாண்டுகள் கூட்டம். அந்த வாண்டுகள் போடும் கூச்சல் காதைப் பிளக்கிறது.
                 இப்படி ஒவ்வொருவராய் புகார் பட்டியல் வாசித்தவிட்டு போன பின்……. அதையெல்லாம் கேட்டு விட்டு நான் சுரேந்திர வாலுபுலியைக் கண்டிக்கிறேன் என்று இராஜமாதா வாக்குறுதி கொடுத்து விட்டு அனுப்பி வைத்தாள்.
               “டேய் சுரேந்திர வாலுபுலிஎங்கேடா போனே, ஒன்னைய  வெளியே விடக்கூடாதுஎன்று ஒவ்வொரு அறையாய் தேடினாள்தேடினாள். எங்கும் காணவில்லை சுரேந்திர வாலுபுலி.
        ”ஐயோ என்னோட சுரேந்திர வாலுபுலியைக் காணுமேஎல்லோரும் புகார் பட்டியல் வாசித்த தால், ஒனக்கு தண்டனை கொடுத்து விடுவேன் என்று பயந்து ஓடி விட்டாயா வாலுபுலிஎன்றவாறு படுக்கையின்       பக்கத்தில், பார்த்தாள் இராஜமாதா
         நல்ல பிள்ளையாய் படுத்து கொண்டிருந்தான், சுரேந்தர வாலுபுலி
என்ற பிள்ளை
                        “அட சே, கனவா ? என் பிள்ளை நல்ல பிள்ளையாச்சே? உச்சி முகர்ந்து முடிசூட்டினாள் முத்த த்தால்.


                                                        கவிஞர் கே. அசோகன்.

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் சிரிப்பே எனக்கு உத்வேகம் மிக்க நன்றி

   நீக்கு
 2. அருமை
  மிகவும் இரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

  பதிலளிநீக்கு
 4. நிஜத்திலும் சேட்டைகள் செய்தால், அவனை.. சுதந்திர வாழு புலி எனலாமோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும் அழைக்கலாம். பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் பிள்ளை நல்ல பிள்ளைதான் என்பார்கள்

   நீக்கு
 5. முடிவு ஸூப்பர் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. ரசித்தமைக்கு மிக்க மகிழ்ந்தேன் நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...