சனி, 6 மே, 2017

வலசை போகா வண்ணத்துபூச்சி

                     வண்ணமய தொலைக்காட்சி
                                                வடிவழகில் மயங்கி நின்றோம்!
                                                எண்ணற்ற ஏவுகணைகள்
                                                ஏவுகின்றோம் நாளுமே
வலசை போகா வண்ணத்துபூச்சி
வலசை போகா வண்ணத்துபூச்சி


                                                கண்ணுக்கினிய பசுஞ்சோலை
                                                கண்டு கொள்ளவில்லை
                                                வண்ணத்து பூச்சிகளும்
                                                வலசை போகவில்லை
                                                வறட்சியை வாசலுக்கு
                                                வரவேற்று காத்திருக்கிறோம்
    
                எண்ணங்களில் சுயநலம்
                ஏற்றிக் கொள்கிறோம்
                கண்களுக்கு கவர்ச்சியை
                காட்டுகின்றோம்
                தண்ணீரை விலைபொருளாக்கினோம்
                தளிரிலைகளை காயவிட்டோம்!
                தண்ணீரில்லா வறட்சியை
                தேடித்தான் வருவித்து கொண்டோம்!
                தைரியமாய் உரைக்கிறோம்
                வல்லரசாக மாறப்போகிறோமெனவே!

               

                ---- கவிஞர் கே. அசோகன்.

12 கருத்துகள்:

 1. #வல்லரசாக மாறப் போகிறோமெனவே#
  தாகத்தைத் தீர்க்கத் தானே சந்திரனில் ,செவ்வாயில் தண்ணீர் இருக்கான்னு ஆராய்ச்சி நடக்குது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்களின் அருமையான கருத்துக்கு

   நீக்கு
 2. வல்லரசு ஆவதைவிட மக்களுக்கு நல்லரசு வந்தால் போதுமே..

  பதிலளிநீக்கு
 3. அருமை அருமை
  ஆம் நம்மை நாமே ஏமாற்றி மகிழ்கிறோம்
  அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 5. வறட்சி போக்கி வண்ணத்துப் பூச்சி காத்து வளம் காணுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...