சனி, 25 பிப்ரவரி, 2017

ஜன்னல் நிலா

பண்ணிசை பைந்தமிழ் கவிஞர்கள் தாம்
            பால்நிலவை பாடாதவர் எவருமுண் டோ?
            விண்ணிலே மின்னுகின்ற நிலவின் ஒளியில்
            வனிதையர்கள் ஏக்கத்திலே மூச்சு விட்டே
            ஜன்னலிலே கன்னம்வைத்தே காத்தி ருக்க
            ஜன்னலதில் எட்டியே பார்த்திடு வாய்!
            விண்ணிலே உயரமாய் இருந்த போழ்தும்
            வனிதையரை ஏன்தானோ வாட்டு கின்றாய்


ஜன்னல் நிலா
ஜன்னல் நிலா -படத்தை சொடுக்கி படிக்கலாமே
            இதழ்விரித்து மணம்வீசும் மலர்க ளெலாம்
            இனியநிலா வரும்போது சுகமாய் தோன்றும்
            புதுமலரின் வாசத்திலே மயங்கி தானே
            பொன்வண்டும் சுற்றித்தான் ரீங்கார மிடும்!
            நதிவெள்ள நீரினிலே முகத்தை காட்டி
            நங்கையின் அழகைத்தான் மிஞ்சிடு வாய்!
            கதிரவனின் ஒளியைத்தான் வாங்கி னாலும்
            கண்குளிரும் ஒளியைத்தான் பொழிந்திடு வாய்!

            மதியைத்தான் மயக்கிடுவாய் ஒளியின் கீற்றால்
            மதியென்று உன்னைத்தான் உரைக்கின் றார்
            விதியென்றே தன்னையே நொந்த வாறு
            விரகத்தில் துடிக்கின்ற முதிர்கன்னி வீட்டில்
            சதிசெய்து நாளும்தான் ஜன்னல் வந்தே
            சதிராடி சிரிப்பதுதான் உன்றன் போக்கோ ?
            மதிமயக்கும் ஜன்னல்நிலாவே நீயும் தான்
            மங்கையென்றே கவிஞர்கள் புகழ்கின்   றாரே!

            வெட்டவெளி வானந்தன்னில் வட்ட மாய்
            வலம்வந்தே ஒளியைத்தான் பொழிகின் றாய்!
            கட்டிளமை கரைந்தேதான் போகுதன் றோ!
            கடிமணம் புரியத்தான் வரனைத் தேடு !
            பொட்டாக உன்னையே நெற்றியி லிட்டே
            பொழுதெலாம் நின்னையே கொஞ்சிடு வேன்!
            தட்டாமாலையாய் உன்னையே சுற்றி வந்தால்
            திங்களதில் ஒர்நாளில் எங்குதான் போனாய்!
            நன்றி – தினமணி-கவிதைமணி
            கவிஞர் கே. அசோகன்

16 கருத்துகள்:

 1. மதி மயக்கும் மதி - தருமேநிம்மதி - கவிதை அருமை !

  பதிலளிநீக்கு
 2. வேரில் பழுத்த பலாவை ஜன்னல் நிலா இந்த பாடு படுத்துவது நியாயமில்லைதான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி

   நீக்கு
 3. ரசித்தேன் மகிழ்ந்தேன் , பாராட்டுக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 4. நிலாவை வைத்துப் புனைந்த பாவிலே
  உலாவிப் பல எண்ணங்களைப் படித்தேன்
  தொடரட்டும் தங்கள் பாவண்ணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...