சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு கவிதை


            மார்கழி மாதம்-புத்தாண்டு 2017 கவிதை
மெல்லிய இருட்டதனில் மென்விரல் களால்
            முகவாயில் கோலப்பொடி ஓட்டிட வேதான்
            சில்லென்ற காற்று சித்தாடையை தழுவிட
            சேல்விழியார் வண்ண கோலங்கள் இட்டாரே!
            புல்லின்மீது பனித்துளிகள் சாம்ராஜ்ய மிட
            புலர்பொழுதில் இசைஒலிகள் முழங்கிட வே
            நல்லதொரு சிந்தையும் நெஞ்சத்தில் தோன்றிட
            நாள்தான் புத்தம்புது மலரென பூத்ததே பார் !

பனிவிழும் மார்கழியில் பிறந்ததுவே புத்தாண்டு!
                        பனியில் நனைந்த ரோஜாவாய் பளபளக்குது!
                        இனிவரும் நாட்களெல்லாம் இனிதே அமைய
                        இறைவனை வணங்குகின்றார் ஆலயத் திலே!
                        கனிவாய் பேசிடவே கணக்காய் உறுதி  யேற்றார்!
                        கரும்உதட்டாக்கிட்ட வெண்சுருட்டை வெறுத்தார்
                        இனியஇசை பயிலவே போகின்றேன் என்றார்
                        இல்லாதவர்க்கு உதவுவேன் என்றார் மற்றோர் !

வண்ணமய மலர்களெல்லாம் மகிழ்ந்தே தான்
            வாரிவாரி ஈந்த்துபார் தேனினைத் தான்
            கண்ணுக்கினிய காட்சியெலாம் வான மதில்
            காட்டிநிற்கும் அழகினில்தான் மயங்கும் போதே
            விண்ணிலே கதிரவனும் தன்னழகைக் காட்டிட
            வியந்துதான் நிற்கின்ற வேளை தன்னில்
            எண்ணமெல்லாம் இனித்துதான் நெஞ்ச கூட்டில்
            எடுக்கின்ற செயல்யாவும் வெற்றி தானே !

            புதிதாய் பிறந்துவரும் மார்கழி தன்னில்
            புத்தம்புது  நற்சிந்தனைகள் நன்றாய் தோன்றும்
            கதிரவனின் வெம்மையும் கனிவாய் தோன்றும்!
            காலையிலே மேக்க்கூட்டம் பனியில் மூழ்கும்
            விதவிதமாய் பறவைகள் சீட்டி யடிக்கும்
            விண்ணிலே அதன்கூட்டம் அழகாய் பறக்கும்!
           அதிகாலை நேரந் தன்னில் அதனைப் பார்க்கவே
            ஆண்டவன்பேர் சொல்லி தொழுக என்றாரோ ?
                             

கவிஞர் கே. அசோகன்
9 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...