வெள்ளி, 23 டிசம்பர், 2016

தள்ளுவண்டி

அடர்ந்த மரங்களடங்கிய அழகான சாலையில் மாலை ஆறுமணியளவில் பைக்கில் போய் கொண்டிருந்த சுரேந்தர், ரோட்டோரமாக நிறுத்தி வைத்திருந்த தள்ளுவண்டி கடைக்கு முன்னால் நிறுத்தினான்.
தள்ளுவண்டி
தள்ளுவண்டி


                               ”அண்ணே, சாப்பிட ஒரு சுண்டல் கொடுங்கண்ணேஎன்றான். அடுத்த ஒரு நிமிடத்தில் ஒரு பிளேட்டில் சுண்டல் வைத்து சுரேந்தரிடம் கொடுத்தார் அந்த தள்ளுவண்டிக் கார்ர்.
                           சுண்டலை சாப்பிட்டுக் கொண்டே தள்ளுவண்டிக்கார்ரிடம் பேசினான்.
                                    அண்ணே,” வியாபார எப்படீ போகுது” என்று ஆரம்பித்தான்.
                      ”நல்லாத்தான் போகுது தம்பி. கடவுள் புண்ணியத்துல ஒரு குறைச்சலுமில்லைஎன்றார்
                             ”அண்ணேநீங்க எவ்வளவு படிச்சீருக்கீங்கஎன்று கேட்டான். அட படிப்பு என்னப்பா, அதோ எதிர்ல தெரியுது பார் அண்ணா யூனிவர்சிடி அதுலதான்பி.டெக்-தான்என்றார் தள்ளுவண்டிக் கார்ர்
                                ”என்னது, அண்ணா யூனிவர்சிடியா, பி.டெக்கா ? அதிர்ந்தான்.
                           ”எதுக்குப்பா இந்த அதிர்ச்சி, நானும் மத்தவங்களை மாதிரி வேலை தேடித்தான் ஒவ்வொரு இடமா போனேன். ஒண்ணும் சரிப்பட்டு வரல.  இந்த ரோட்டுல, யூனிவர்சிடி பக்கத்துல டீக்கடை, ஓட்டல்-ன்னு அவ்வளவா இல்லை. அப்பத்தான்,  சுண்டல் விக்கிறவர் ஒருத்தர்,  அவங்க சொந்த ஊர்ல செட்டில் ஆகப்போறதாகவும், அதனால வண்டியை வித்திடப் போறதாகவும் சொன்னார்.
                            சரி, வேலைத் தேடி, இன்னொருத்தர்கிட்ட வேலை செய்யுறதுக்கு பதிலா, கௌரமா நாமளே தொழில் செஞ்சா இன்னா-ன்னு வண்டியை வாங்கி சுண்டல் வியாபாரம் ஆரம்பிச்சேன். வீட்டுல கூட முதல்ல வேண்டாம்தான் சொன்னாங்க, நான்தான் பிடிவாதமா இந்த வியாபாரம் ஆரம்பிச்சேன்.  இன்னையோடு ஐந்து வருஷம் ஆச்சு.
                                  இந்த வேலை சாயூங்காலம் ஆரம்பிச்சு நாலு மணி நேரத்துல முடிஞ்சுடும், லாபமும் கணிசமாய் இருக்கும்.  மனைவி பேர்ல ஒரு வீடும்…. என் பேர்ல ஒரு வீடும் வாங்கிட்டேன். பையன் பேர்ல வீடு வாங்க வீடு தேடிட்டிருக்கிறேன்.” என்றார் சுண்டல் விற்கும் தள்ளுவண்டிக்கார்ர்.
                                 அவரையே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிக்கும் போது, இன்னொரு பைக்கில் ஒருத்தர் இறங்கிஇன்னாப்பா பாண்டியா, ஒரு ஐநுறு ரூபாய் கைமாத்தா கொடேன்சம்பளம் வாங்கின உடனே கொடுத்துடுறேன்என்று கேட்கதன் பாக்கெட்டில் இருந்து ஐநூறை எடுத்து கொடுத்தான் பாண்டியன்.
                                ”தேங்ஸ் பாண்டியா, ” என்று சொல்லிவிட்டு பைக்கில் சென்றார்.
                                பைக்கில் போனவுடன், ”இதோ இப்போ போறாரே, அவரும் நானும், ..டி- ஒண்ணா படிச்சவங்க, ”ஒரு கம்பெனில வேலை செய்யுறார்மாசமாசம் பட்ஜட்ல காசு உதைக்கும்போது என்கிட்டே கடனா வாங்கிட்டு போவாருஎன்றார் தள்ளுவண்டிக்கார்ர்.
                                ”தள்ளுவண்டிக் கார்ர் சொன்னதையும்…. அவர் பிரண்டு கைமாத்து வாங்கி போனதையும், கூட்டிக்கழித்து மனதுக்குள் கணக்கு போட்டு பார்த்தான்.

                                ”சேபி.-படிச்சதையே பெரிய படிப்புன்னு நினைச்சுகிட்டு, வேலை தேடுறேன் பேர்ல வெட்டியா ஊரை சுத்திகிட்டிருந்த்து எவ்வளுவு தப்புஎன்று உணர்ந்து  சுயமயாய் ஏதாவது ஒரு தொழில் செய்ய திர்மானித்து உற்சாகத்தோடு பைக்கில் பறந்தான்  சுரேந்தர்.


                                                                                              கவிஞர் கே. அசோகன்.

11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வெகுநாட்களாக நீங்களும் வலைத்தளத்திற்கு வரவில்லை. நான் தற்போது கோவை மேட்டுப்பாளையம் தற்காலிகமாக குடியமர்ந்துள்ளேன். சிறுகதைகள் தொகுதி விரைவில் வர இருக்கிறது. தொடர்ந்து ஆதரவு நல்கும்

   நீக்கு
 2. உண்மையதுதானென்றாலும் இங்கே என்ன படிக்கிறோம் என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பது முக்கியமாகக் கருதும் கூட்டமில்லை.

  என்ன புத்தகம் எப்போது வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு மிக்க நன்றி, ”அம்மா” என்ற தலைப்பில் தி.நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள கலைஞன் பதிப்பகம் விரைவில் வெளியிட இருக்கிறது.

   நீக்கு
 3. சுண்டல் வியாபாரத்தில் இவ்வளவு லாபமிருக்கா?கொஞ்சம் மிகைதான் என்றாலும் சொந்தத் தொழில் எது செய்து பிழைத்தாலும் தவறில்லை :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...