செவ்வாய், 15 நவம்பர், 2016

ஆயிரம் ரூபாய்

ஆயிரம் ரூபாய்-சிறுகதை

, பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டோணும், ஒரு ஆயிரம் ரூபா கடனா கொடுங்க எசமான், என்னோட சம்பளத்துல மாசமாசம் இருநூறா கழிச்சிக்கிடுங்கதலையை சொறிந்தவாறே கேட்டான் கண்ணாயிரம்.

http://kavithaigal0510.blogspot.com
ஆயிரம் ரூபாய்
காண்க விக்கிபீடியாஆயிரம் ரூபாய்


                                ”என்னது ஆயிரம் ரூபாயா? வேலையைப் பாருகடன் கேட்டு வந்துட்டே, ரூபாயெல்லாம் கடனா கேக்குறதா இருந்தா, இப்பவே இடத்தை காலிபண்ணிடுஅதட்டலாக விரட்டினார் கோடிஸ்வரன்.
                                கோடிஸ்வரனின் அதட்டலுக்கு கண்ணாயிரம் பின்வாங்கினான். வாய்மூடி மௌனமாய் வேலை செய்து கொண்டே….”ஏழையாய் பிறந்ததுதப்புதான். நாம செய்த பாவம்தான் நம்மளை இப்படி வாட்டி வதைக்குது வறுமைஎன்று புலம்பிக் கொண்டான்.
                                 வேலையை முடித்து விட்டு…. கோடிஸ்வரனின் வீட்டின் ஓரமாய் ஒடுங்கி சற்று கண்ணயர்ந்த போது….”டேய், அந்த மூட்டையை பத்திரமா வையிடா, யாருகிட்டேயும் மூச்சுவிடாதேஎல்லாம் தேர்தல் செலவுக்கு வேணுமடாஇதை வைச்சுதான் தேர்தல நம்ம கெத்த காட்டணும், ஜெயிக்கவும் வேணுமடாஎன்று கட்டளையிட்டார் இன்னொரு கைத்தடிக்கு
                                ”எசமான், இவ்வளவு பணத்தை எப்படி ஜனங்களுக்கு கொடுக்கப்போறிங்க? கேள்வி கேட்டான்.
                                ”டேய், அதெல்லாம் உனக்கெதுக்கு? வேலையைப் பாருடா? என்று சொல்லி விட்டு படுக்கைக்கு போனார்.
                                ”படுக்கையில் குறட்டை சத்தத்தை மீறிதொலைக்காட்சியில்அந்த அதிரடி அறிவிப்பைக் கேட்டதும் ஆடிப்போய் விட்டார் கோடிஸ்வரன்.
                                 மறுநாள் காலை….. ”டேய், கண்ணாயிரம், ஸ்கூல் பீஸ் கட்ட பணம் கேட்டியே, ஒராயிரம் இல்லே ஒன்பதாயிரம் கூட தர்ரேன்நான் தர்ற பணத்தை பேங்கல போய் மாத்திக் கொடுடாஎன்று கெஞ்சி கொண்டிருந்தார் கோடிஸ்வரன்.
                                ”ஐயாநானோ, அன்னாடாங்காய்ச்சி, நீங்க கொடுக்கற பணத்தை எடுத்துட்டு பேங்குக்கு போனா, அதைக் கொண்டாஇதைக் கொண்டா-ன்னு ஏதாச்சும் பேப்பர்கள் கேட்பாணுங்கோஆள விடுங்க எசமான் என்று இடுப்பில் இருந்த துண்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டு நடையைக்கட்டினான் கண்ணாயிரம்.

                                 

6 கருத்துகள்:

 1. யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
  த.ம.1

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் பொன்னான கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. கண்ணாலத்தின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...