ஞாயிறு, 6 நவம்பர், 2016

புதிர் ” -சிறுகதை

என்னப்பா தேவன் எனக்கு …. உதவியாக தமிழ் தட்டச்சு செய்யத் தெரிந்த ஒரு நல்ல ஆள் வேண்டும்-பாஇருந்தா ஏற்பாடு பண்ணிக் கொடுஎனக்கு டைம் போத மாட்டேங்குது  வேலை அதிகமில்ல….  தினம் ஒரு மணி நேரம் காலை-ல இல்ல சாயங்காலம் வந்தா போறும்நான் சொல்றத தமிழ்-ல டைப் பண்ணிக் கொடுத்தா போதும்நல்ல சம்பளம் தரேன்என்றார் எழுத்தாளர்
புதிர்-சிறுகதை
புதிர் ”  -சிறுகதை


                                வெகு நாட்களுக்கு பிறகு….தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரு இளைஞன் கிடைக்கவே…. எழுத்தாளரிடம் அறிமுகமாக்கி விட்டு தன் வேலையை கவனிக்க  சென்று விட்டான் தேவன்.  வேலை ஆரம்பமாகிறது.
                                முதல் நாள்…….சென்றவுடன்…. “தம்பிடைப் ரைட்டர்  இன்னும் வரல அதனால நான் சொல்றத கையால எழுதுஎங்க எழுதி காண்பி கையெழுத்து நல்லா இருக்குதா பார்ப்போம்
                இளைஞன் எழுதிக் காண்பிக்க ;;;…. நல்லாத்தான் இருக்கு  எழுதுப்பாஎன்றார்  எழுத்தாளர்
                                  முதல் நாள்…….  எழுத்தாளர்  சொல்லச் சொல்ல எழுதினான்.. எழுதி முடித்தவுன்  புரிந்தது அவனுக்கு இது சிறு கதைப் போல இருக்கிறதேஎன                அடுத்த நாள்அதே போல் சொல்ல...சொல்ல அது கட்டுரை ஆகிறது…  அடுத்து அடுத்து நாட்கள் கடந்த பின் நல்ல பாpச்சியமான பின்
                                ஸார்  எனக்கு கூட கவிதைகதைகள் எழுத ஆர்வம்...ஏதோ ஒன்றிரண்டு எழுதி...அனுப்புவேன் பத்திரிகைகளில் எப்பவாச்சும் வந்திடும்
 என சொன்னான் அப்பாவித்தனமாக இளைஞன்              “மறுநாள்எழுத்தாளர்  வீட்டை தட்டுகையில்…... சிறுவன் வெளியே எட்டிப் பார்த்து….   அப்பா வீட்ல இல்ல..ஒங்களை நாளைக்கு வரச் சொன்னார்      அடுத்த நாள் அப்பா நாளைக்கு வரச் சொன்னார் இப்படி சிறுவனே ஒவ்வொரு நாளும் பதில் சொல்ல .சொல்ல இளைஞன்எழுத்தாளர் வீட்டுக்கு செல்வதை நிறுத்தினான். பேசியபடி சம்பளமும் கிடைக்கவில்லை        
         ஒரு நாள் நூலகத்தில் பத்திரிகை ஒன்றை படித்தான் அதில் அந்த எழுத்தாளரின் பேட்டி…. அதில் அவரின் தொழில் தர்மம் அப்படி இப்படி எனவும்... வேலை செய்பவர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்கப்படுகிறதுஎன பிரமாதமாய்  வெளியாகி இருந்தது.
                                “பேட்டியினைப் படித்த மறு நாள்…. எழுத்தாளரின் வீட்டின் கதவைத் தட்டிய பொழுது….  சிறுவன் எட்டிப் பாh;த்து இருங்க அப்பாவைக் கூப்பிடறேன் என்று  உள்ளே போனவன் திரும்பி வந்து ஒங்ககிட்ட இதை கொடுக்கச் சொன்னார்  என்று கணிசமான தொகை ஒன்றை தந்தான்
     “ தவிர்த்ததும், கணிசமான தொகையும் …. புரியாத புதிராகத்தான் இருந்தது அவனுக்கு

                                                                                                                                                                

8 கருத்துகள்:

  1. எனக்கும் கூட புதிராத்தான் இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  2. இளைஞனும் எழுதுவான் என்றால் ஒரு ஒப்பீடு வந்து விடுமோ என்கிற பயமோ... ஆனாலும் புதிர்தான்!

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...