செவ்வாய், 11 அக்டோபர், 2016

பாசம் - சிறுகதை

மருந்து வாசமும், பினாயில் வாசமும் மூக்கைத் துளைத்திட….. பரபரப்பாக ஒடியும், தேடியும்  அஸ்பித்திரி படுக்கையருகே போய் நின்ற அம்மாவைப் பார்த்து,             “நீ முதலிலியே என்னை, வெளிய போடா நாயேஅப்படின்னு வெரட்டியிருந்தா, நான் இன்னைக்கு இந்த நிலமையில இருக்க வேண்டியதில்ல, ஏம்மா நீ அப்படி செய்யலகேட்டான் குணாளன்.


                                            
அந்த வார்த்தையை கேட்டதுமே ஆடிப்போய் விட்டாள். சீராட்டி பாராட்டி வளர்த்த மவனா! இப்படி ஒரு கேள்விய கேப்பான்அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
                                            
டாக்டரும்,  நர்ஸ்-ம் பரபரப்பாக இயங்குவதும், அவ்வப்போது பேன்ட் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்ப்பதுமாக இருந்ததில் அவளுக்கு ஒண்ணும் புரியவில்லை
                                          
சிஸ்டர் என்னாச்சு? என் மவனுக்குஎன கேட்க            “ஒம் பையன்தான, அவனையே கேளு….சொல்லுவான்சிடுத்துக் கொண்டு அடுத்த பேன்டை நோக்கி போனாள் நர்ஸ்.
                                   அந்த பெட்டில் உட்கார்ந்துபையனின் தலையைக் கோதி என்னப்பா ஆச்சு? ஒனக்கு
ன்னு கேட்க..
  

                                          


பாசம்-சிறுகதை
“பாசம் ” -  சிறுகதை
                               
 அம்மா நான் ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு இராத்திரி பார்ட்டிக்கு போய் நல்லா குடிச்சுட்டு நிலைதடுமாறி வந்தப்பவே என்னை கண்டிச்சுருக்கணும். வுட்டுட்ட…  நான் குடிச்சுட்டு வரும்போதெல்லாம் கைத்தாங்கலா கூட்டீப் போய் சோறுட்டி, படுக்கையில படுக்க வைச்சு போர்வைகூட போர்த்திட்டு போயிடுவே.  மறுநாள்கூட...ஏன்டா ? இப்படி குடிச்சுட்டு வந்தேன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டே...ஏன்னா ஒனக்கு அம்மான்னா பாசத்தை மட்டும் கொட்டிட்டா போதும்ன்னு நீயா நெனச்சுக்கிட்ட. பாசம் ஒங்கண்ணை மறைச்சிடுச்சும்மா. அப்பா இல்லாத எனக்கு நீ அப்பாவாவும் இருந்திருக்கணும். ஏம்மா அதை செய்யலஎன அவன் வாயிலிருந்து ஈனஸ்வரமாக வார்த்தைகள் ஒவ்வொன்றாய் வந்து விழ….    இவ்வளுவு நாளும் அம்மாவாகவே வாழ்ந்ததில் உள்ள தவறு அப்பொழுதுதான்  புரிந்து கண்களிலிருந்து தாரை..தாரையாய் கண்ணீரை சிந்தினாள்.
                                   

11 கருத்துகள்:

 1. மாறுபட்ட சிந்தையை ரசித்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. உண்மைதானே ,நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையில்தானே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பை மட்டுமல்ல கண்டிப்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே இக்கதை. கருத்திற்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. பதில்கள்
  1. கருத்து வழங்கி ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...