ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

மலர்க்கணை-கவிதை

மன்மதன் எய்திட்டான் மலர்க்கணை
மங்கைநீ எய்திட்டாய் விழிக்கணை
என்மனம் நினைந்தது உனைதனை
இச்சகத்தில் உளவோ உன்இணை!
            காரிகையே  கொண்டாய் ஊடல்-நான்
                                கனவில் கண்டேன் கூடல்!
                     காணொளியிலும் கண்டுகளிக்கவாயில்லா பூச்சியாய் இருந்தேன்
வஞ்சிநீ கிட்டா அருந்தேன்
பாய்தனில் நித்திரை மறந்தேன்
பனிமொழி பகன்றதில் திளைத்தேன்
             காரிகையே  கொண்டாய் ஊடல்-நான்
                                கனவில் கண்டேன் கூடல்!

கோவை இதழ்களோ கெஞ்சும்
கருவண்டு விழிகளோ கொஞ்சும்
பாவையுன் சிரிப்போ முல்லை
பாரினில் அதுபோல் இல்லை!
            காரிகையே  கொண்டாய் ஊடல்-நான்
                                கனவில் கண்டேன் கூடல்!

வஞ்சியுன் இடையோ கைப்பிடி!
வாயிதழில் ஊறுதே! தேன்-படி
நெஞ்சினில் ஏற்றினாய் தீக்கனல்
நேரிழையேநீ இன்ப புதுப்புனல்
             காரிகையே  கொண்டாய் ஊடல்-நான்
                                கனவில் கண்டேன் கூடல்!


                               8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பாராட்டுக்கு மிக்க நன்றி, காணொளி நன்றாக இருந்தனவா ?

   நீக்கு
 2. கனவில் காணும் கூடலுக்கே இப்படி என்றால் ,........நினைச்சுப் பார்க்கவே முடியலையே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு மிக்க நன்றி, தமிழ்மணத்தில் வாக்கு பதிவிட்டால் நலம்தானே

   நீக்கு
 3. எல்லா பூச்சிகளும் வாய் இல்லாமலா பிறக்கின்றன...அய்யா...

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...