வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பூத்திடுமே அந்தப் பூ-கவிதைகள்

கதிரவன் எழுமுன்னே அழகுபேடை
காட்டிடுவாள் அன்பனுக்கு விழிஐாடை!
சுதியென மீட்டிடுவாள் மொழியாலே! –மலர்
சுரும்பினம் மயங்கிடும் விழியாலே
           ஈர்த்திடுவாள்மணம்
           சேர்த்திடுவாள்!
காணொளியிலும் கண்டு களிக்க கிளிக்


மதியெனவே மனத்தினிலே கொண்டாள்நல்
பண்பென்னும் நாணமும் பூண்டாள்
பொதிகைமலைச் சாரலிலே சந்திப்புமாலைப்
பொழுதானால் பூத்திடுமே அந்தப் பூ
           விழிகள் சேர்ந்திட- வாய்
           மொழிகள் மறைந்திடுமே!

அடுப்படியில்  அறுசுவையும் முடித்துகூந்தலை
அழகுற சீவிபூக்களுமே முடித்து
நடுப்பகலில் நல்லுணவை கொடுத்துஅன்பு
நாயகனை மலர்க்கணையால் தொடுக்க
           இடைஒயிலாள்அன்ன
           நடைப் பயில்வாள்

இடுப்புதனில் கஞ்சிகுட மேந்திஅழகு
இருவிழிகளில் அன்பினை ஏந்தி
வீடுவிட்டு வரப்பதனில் நடந்திடுவாள்பின்
வேலவன்தாம் மார்பினில் படர்ந்திடுவாள்!
           இதுவே வாடிக்கைகிளிகட்கோ
           அதுவே வேடிக்கை!

மதிஉலா வருமுன்னே இளங்கன்னிகாதல்
மன்னவனைக் கண்டிடவே மனம் எண்ணி
புதிதான கண்டாங்கி உடுத்திநாரில்
பொலிவான முல்லையுமே தொடுத்து
           கூந்தலில் சூடிடுவாள்அன்பு
           ஏந்தலை நாடிடுவாள்


8 கருத்துகள்:

  1. அவளின் மன்னவனாய் நான் இருக்கக் கூடாதா என்று ஏங்க வைத்தது ,உங்களின் கவிதை :)

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...