புதன், 14 செப்டம்பர், 2016

ஓடுதென வரலாறு

காவிரி தென்பென்னை பாலாறு
கணக்காய் ஒடுதென வரலாறு!
தேவையின் அளவை கூறிடின்
தடியடி கலவரத்தில் சிலபேரு
காயம் பட்டவர்கள் பலபேரு
கண்ணீர் வடித்தவர்கள் சிலநூறு
நியாயம் நேர்மை என்பதெலாம்
நொடியில் மறைந்து போனதுவே!கங்கை காவிரி இணைந்திடவே
காலம்தான் வழியை கூறிடுமே
பொங்கும் கடலில் சேர்ந்திடும்
புதுப்புனல் நீரினைப் பெறவே
அங்கும் இங்கும் ஆர்ப்பாட்டம்
அனைவர் மனதிலும் போர்-பாட்டு!
கங்குல் தந்திடும் வெம்மையென
கதறி துடித்து அழுகின்றார் !

நாடென்பது ஓரென்றால் ஆங்கே
நாட்டு மக்களும் ஓரினமே!
காட்டினில் வாழும் விலங்கினமும்
கவலையின்றி எங்கும் உலவிடுமே!
நாட்டில் வாழ்ந்திடும் நாமெல்லாம்
நதீநீருக்கு சண்டைப் போட்டால்
நாடுதான் நன்றாய் இருந்திடுமா?
நல்வளங்கள் இனியும் பெருகிடுமா?

ஓடுதென வரலாறு

ஓடுதென வரலாறு 

6 கருத்துகள்:

 1. இப்படியே நீருக்கும் சண்டை நீடிக்கும் என்றால் ,பிரிவினைவாதிகளின் கை ஓங்கிவிடும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாடு சுதந்திரம் பெற்ற போதே வங்கிகளை தேசியமயமாக்கியது போல் நதிகளையும் தேசியமயமாக்கி இருந்தால்....இது போல் சண்டை நிகழாது தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. ஆள்பவர்கள் யாரும் நல்லர்களில்லை அதனால் காவிரியை வைத்து இன்னமும் பல கலவரங்கள் நடக்கும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலான கருத்திற்கு மிக்க நன்றி, நல்லதே நினைப்போம்

   நீக்கு
 3. காவிரியே வந்து சொன்னால்தான் உண்டு தான் யாருக்கு சொந்தம்ன்னு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நதியின் போக்கை தீர்மானிப்பது நதிதானே தங்களின் கருத்துக்கு மிக நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...