ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கொழுக்கட்டை- சிறுகதை

பெரிய அரசமரத்தடியில் உறாயாக உட்கார்ந்திருந்தார். யாரென்று பார்த்தால் அட நம்ம புள்ளையார்.

அந்த வழியாக போகிறவர்களும், வருகிறவர்களும் சிலர் இருகைகளால் வணங்குவதும், சிலர்  உறாய் சொல்வதுபோல, ஒரு கையால் வணங்குவதாகவும் இருந்தார்கள்.
கொழுக்கட்டை
கொழுக்கட்டை
படத்தை கிளிக் செய்து காண்கஅப்படி வணங்குபவர்களில் இருவர் அருகருகே நின்று கொண்டு……“பிள்ளையாரே, ஒரு வருத்துக்குள்ள நான் வெயிட் பார்ட்டியாக மாற…  உன்னோட ஆசிவேணும்அப்படி நடந்திட்டாமுந்நூற்று அறுபத்தி ஐந்து கொழுக்கட்டை நைவேத்யம் பண்றேன்என்று ஒருவர்  மனதிற்குள்ளும்மற்றொருவர்  சத்தமாகவும் வேண்டிக் கொண்டனர்
                       
சத்தமாக வேண்டிக் கொண்டவரை, மௌனமாக வேண்டிக்கொண்ர் முறைத்தார். “நம்ம மனசுல வேண்டினதை அவரும் வேண்டிக் கொள்கிறாரே எப்படி …?.என்று.. சந்தேகம்தான்முறைத்தவருக்கு…!
                       
தினமும் காலையில் வந்து இருவரும் பிள்ளையாரின் முன் அமர்ந்து  ….மதியம் வரை வணங்கி விட்டு வீட்டுக்கு செல்வது வாடிக்கையானது. 
                       
பிள்ளையாருக்கோ குழப்பம்… “யாருக்கு துணைபோவது என்று….”அவரே மனதுக்குள் நம்ம அப்பாதான் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து சோதிச்சார்ன்னா, சாதாரண மனுன்களும்….நம்மளை இப்படியா பண்ணுவாங்க…?”. அவர்கள் என்னதான் செய்கிறார்கள் நாமும் பார்ப்போமே.. என தன் மனதிற்குள்ளே பேசிக் கொண்டே…, தன்னோட அப்பாவான சிவனைத்  தியானிக்க துவங்கினார்.
                        கெடுமுடிவதற்குள்…….... (விநாயகர் சதுர்த்திக்குள்)
                       
சத்தமாக வேண்டிக் கொண்டவன் மிகப்பெரிய பணக்காரனாகி விட்டான். இதைப் பார்த்து மௌமான வேண்டிக் கொண்டவனுக்கு கோபம் பொத்துக்கொண்டது… “புள்ளையாரே நீ செய்தது அநியாயம், இரண்டுபேருமே வேண்டிக் கொண்டோம், ஆனால் நீ அவனை வெயிட் பார்ட்டியாக்கி விட்டாய்நான் முன்னமாதிரியேதான்  இருக்கிறேன்”.. இது ஓரவஞ்சனை, அக்கிரமம், ஒனக்கு கொழுக்கட்டையும் கிடையாது, கற்பூரமும் கிடையாதுஎன காட்டுக்கத்தலாய் சண்டையிட்டான் புள்ளையாரிடம்.
              
 ”  முட்டாளே…..நீ;… .என்னைப் போலவே   அசையாமல் உட்கார்ந்து கொண்டிருந்தாய்…. அவனும்தான் உட்கார்ந்து இருந்தான்ஆனால்மனதுக்குள் விதம்விதமாய் கற்பனை செய்துவீட்டிற்கு போனதும் என்னை பலவித ஓவியங்களாக வரைந்து விற்று வெயிட் பார்ட்டியாகிவிட்டான். இதற்கு நான் என்ன செய்யட்டும்…?. நீயும் வேணாம்..!.ஒங் கொழுக்கட்டைகளும் வேணாம் …..போடா போ…. முயற்சி செய்….. முடங்கி கிடக்காதேஅசீரியாய் சொன்னார்   பிள்ளையார். அன்று விநாயக சதுர்த்தி.

9 கருத்துகள்:

 1. உழைப்புதான் உயர்வு தரும்னு பிள்ளையாரும் சொல்லிட்டாரா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், பிள்ளையார் சொல்லிவிட்டார், மிக்க நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்தினை வழங்கியமைக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் உழைக்க சொல்லி பிள்ளையாரா சொன்னாரு....

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...