சனி, 6 ஆகஸ்ட், 2016

வேலை- சிறுகதை

தணிகை முருகனின் கோவிலில், முருகனின் முன்னால் நின்று, “முருகா,    வணங்காமுடியான என்  புருனுக்கு நல்ல புத்திய கொடுத்து வேலைக்கு போற மாதிரி  செய்யுப்பாவிமலா உரிமையோடு வேண்டினாள்
வேலை- சிறுகதை
வேலை-  சிறுகதை
.     

அப்போது, யாரோ ஒருவர்   ”வணங்குவதே வேலை அவனுக்குஎன்று நண்பனைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்
                              
   “விமலா, நாம வேண்டுனதுக்கு முருகனின் பதில் இதுதானோஎன்று நினைத்துக் கொண்டு சந்தோமாக வெளியேறினாள். வீட்டுக்குப் போனதும், “புருனிடம்இந்தாங்க, நான் முருகனிடம் ஒங்களுக்கு வேலை  கிடைக்க வேண்டிக் கொண்டேன், முருகனும்,“வணங்குவதே வேலைஎன ஆசி வழங்கினார் என்றாள்.
                                  
அப்படியா, ரி..ரிஒனக்கு வேல்தானே வேணும், நான் வாங்கி தருகிறேன், நீயும்  கும்பிட்டுக்கோ, என்னைத் தொல்லைப்படுத்தாதேஎன்றான்.
                                   
என்னடா இது, வேலைக்கு போறேன்னு சொல்வான்னு பார்த்தா, புருன் இப்படி சொல்றானே, யோசித்து, எல்லாம் என் போறாத காலம்-ன்னு புலம்பினாள்.   
                           
கொஞ்சம் நாள் கழிந்தது. புருன் இன்னும் திருந்தவில்லை... ஊர்சுற்றினான்;  விமலா, தினமும் வேலைவைத்து, அதற்கு நைவேத்யம் செய்து பூஜை செய்துக் கொண்டு வந்தாள்.
                                     
திடிரென்று, ஒரு நாள் புருன் விமலாவிமலா, நீ வேலைகும்பிட்டதால,; எனக்கு வேலைக் கிடைச்சிடுச்சுஎன்னை பைவ்-ஸ்டார் ஓட்டல்லவேலைக்கு வரச்சொல்லி இருக்காங்க 
                                   
 சரி….....ரி … …, “என்ன வேலை சொல்லுங்கஎன்றாள் விமலா.நாளைக்குத்தான்  தெரியும் ,   நீயே நேர்ல வந்து பார்த்துக்கோ.”.அப்படின்னு சொல்லி  வழக்கம்போல ஊர் சுற்ற புறப்பட்டான்.
                              
மறுநாள், விமலா நேரில் போய் பார்த்தால், ஒரு பெரிய பைவ்-ஸ்டார் ஓட்டலில் பிரதான வாயிலில்  வருகிறவா;, போகிறவர்களுக்கெல்லாம்  கதவை திறந்தும்….மூடியும் குனிந்து கும்பிடு  போட்டு வணங்கி வரவேற்றுக் கொண்டிருந்தான்.
                        
 முருகா, “வணங்குவதே வேலைஎன்பதற்கு இதுதான் அர்த்தமோ, எப்படியோ  புருன் திருந்தினானே, என்று விமலா சந்தோப்பட்டாள்.
நன்றி- தமிழ் தொழில் உலகம்                                                                                          

8 கருத்துகள்:

 1. எல்லாம் வோலைதானே நண்பரே பிறரைத் துன்பப்படுத்தாமல் வாழ்வதே சிறப்பு

  பதிலளிநீக்கு
 2. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி. வணங்காமுடியான அவனுக்கு வணங்குகின்ற வேலை கிடைத்தது என்று கருத்துதான் தலைவரே

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. வேலை வணங்காமல் வேறென்ன வேலை என்று இருந்து இருந்தால் வேலை கிடைத்து இருக்காது :)

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகை்ககும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி. தற்போது வலைத்தளத்தில் பீட்ஜிட், லிங்வித்இன் கேஜட்டுகள் இயங்கவில்லை காரணம் உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் விளக்குங்களேன். நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...