செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

இதுதான் காதல் என்பதோ

வெள்ளி நிலவொன்று கண்டேன் !
கொள்ளை அழகென்று புகழ்ந்தேன்
கள்ளமில் கன்னியைக் கண்டேன்
வெள்ளி நிலவினையே மறந்தேன்!


வெள்ளி கொலுசொன்று கண்டேன்
இனிய ஓசைதனை நான் கேட்டேன்
தண்டைக் காலழகைக் கண்டேன்
தகுமோ இணை கொலுசென்றேன்!

புள்ளி மயிலொன்று ஆடக்கண்டேன்
புளகாங்கித மாகி பூரித்து போனேன்
புள்ளி கோலமொன்று இட்டாள் !
புள்ளிமயிலே தோற்ற தென்றேன்!

மானொன்று மிரளவே கண்டேன்
மிரளாதே யெனஆரத் தழுவினேன்
மானென மருண்டு நின்றாள் !
மயங்கித்தான் மருண்டு நின்றேன்!

குயிலதின் கூவல் கேட்டேன்
கேட்கவே காதுக்கினி தென்றேன்
குயிலாக பண்பாடி வந்தாள்
கூவல் தோற்குதே  என்றேன்

எழில் ஏந்திழையாளின் முன்னர்
இயற்கையின் படைப்பு களெலாம்
எம்மாத்திரம் என்றே இயம்பினேன்!
இதன்பேர்தான் காதல் என்பதோ ?

இதுதான் காதல் என்பதோ ?
இதுதான்  காதல் என்பதோ ?
படத்தை சொடுக்கி காண்க
இதுதான் காதல் என்பதோ ?

13 கருத்துகள்:

 1. கவனம் இருக்கிறது. இளவயதில் கிறுக்கியது இன்று கவிதையாக பதிவிடப்பட்டுள்ளது. பயப்படாதிர்கள். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. செல்லுமிடமெல்லாம்
  செல்வியவள் பரவி நிற்க
  செலவாகும் வார்த்தைகள்

  ஹா....ஹா...

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

  பதிலளிநீக்கு
 5. காதலென்றால் இதுதான் என்று தெரிந்து கொண்டேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரிந்து கொண்டதற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 6. காதலென்றால் இதுதான் என்று தெரிந்து கொண்டேன்....

  பதிலளிநீக்கு
 7. என் வாக்கை பதிவு செய்துவிட்டேன்..வெற்றி...

  பதிலளிநீக்கு
 8. காதல் வந்தால்தான் இப்படி கவிதை தோன்றும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதல் வந்தபோது கிறுக்கியது இப்போது கவிதையானது. மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...