ஞாயிறு, 24 ஜூலை, 2016

இயற்கை வழி


கம்பங்கூழும் கேப்பைக் கூழும்
கேட்பாரற்று கிடக்குது
காஞ்சிபோன பீட்சாவையே
காயவைச்சு திங்கறான்!


வம்பளத்த திண்ணையெலாம்
வாழுகின்ற இடமாச்சு!
தம்பட்டம் அடிக்கத்தான்
முகநூல்கள் வந்தாச்சு!

நெல்லுசோறும் நெய்மணமும்
நாதியற்று போயாச்சு!
கல்லும் மண்ணும் விலையாகி
கட்டிடங்கள் ஆயிடுச்சு!

தொலைபேசி தொல்லையென
தேடிப்போய் பேசினாங்க!
அலைபேசி அழைத்தழைத்து
தொல்லையாக மாறிபோச்சு!

கண்ணெதிரே உள்ளவனுக்கும்
காணாமலே பேசுறான்!
என்னடா இதுன்னு கேட்டால்
அண்ணாந்து பார்க்கலைன்கறான்!

ஆகாயத்தில் அந்தரத்தில்
ஆயிரமாயிரம் விண்கலங்கள்!
நோகாமலே நோன்பு கும்பிட
நினைக்கிறான் இது அமர்க்களம்!

அமர்க்களமும் அமைதியாக
அடங்கிபோக வழியுண்டு!
இயற்கைவழியே நல்லவழி
என்றே நினைக்க தோணுது!


 
இயற்கை வழி
                        இயற்கை வழிஇயற்கை வழி

9 கருத்துகள்:

 1. வேதனையான விடயங்களே.... என்ன செய்வது ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. இயற்கையே தான் நல்லவழி என்பது உண்மையான வரி,

  பதிலளிநீக்கு
 4. இயற்கையே தான் நல்லவழி என்பது உண்மையான வரி,

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...