ஞாயிறு, 17 ஜூலை, 2016

ஏழைக்கும் இனியாளே

முன்வினைப் பயனோ மூத்தோர் தவப்பயனோ
விண்ணவர் வாழ்த்துதலோ இல்லை- அன்னை
உமையவள் அருள்பார்வை பட்டதாலே என்றன்
இமைக்குள் என்றும் ஈஸ்வரியே !
ஏழைக்கும் இனியாளே
ஏழைக்கும் இனியாளே
வேப்பிலையில் ஆடிடுவாள் வேலனவன் தாயாவாள்
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவாள்எல்லா
பிள்ளைக்கும் அன்னை யாவாள் இனிதான
பிள்ளைக் குணத்தாள் பாதம்சேர் !

மஞ்சளிலே கொஞ்சிடுவாள் மாவிளக்கில் ஒளிர்ந்திடுவாள்
கொஞ்சிடும் குலக்கொடியாள் ஆகிடுவாள்ஆடிமாத
அழகுதேராய் பூங்கரகமென ஆடியாடி வந்திடுவாள்
பழகுவதற்கு இனியாளின் பாதம்பற்று !

ஏழைகள் இல்லம் ஏகிடுவாள் எளியவர்களின்
கூழுக்கும் மயங்கியே குறைதீர்ப்பாள்பூமியில்
மாரியென பேர்கொள்வாள் மழையென மாறிடுவாள்
ஏர்தூக்கும் ஏழைக்கும் இனியாளே !

7 கருத்துகள்:

 1. வேப்பிலைக்காரியின் பாடல் நன்று நண்பரே வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. தமிழ் களஞ்சியத்தில் பதிவுகளை பதிவிடுவது பற்றி சற்று விளக்குங்களேன் அன்பான கோரிக்கை இது

   நீக்கு
  2. SIVAPPUKANNEER@gmail.com தொடர்பு கொள்ளச்சொல்லி இருந்தேன் நண்பரே

   நீக்கு
  3. செய்தி கிடைக்கவில்லை. தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...