செவ்வாய், 21 ஜூன், 2016

அரியணை

தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் படை பலத்தை, பண பலத்தைக் காட்டி, அரியணையை கைப்பற்ற துடித்தது கண்கூடான உண்மை. இதை யாரும் மறக்கவும்மறுக்கவும் இயலாது.


 ஆனால்……அரசபோகத்தையும், மாடமாளிகையும், சுகபோகங்களையும் துறப்பதற்கு முடிவெடுத்து…….ஞான மார்க்கத்தை தேர்ந்தெடுத்தவர் சித்தார்த்தன்….
           எல்லோரும், அரியணையில் அமர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கையில்அந்த அரியணையை துச்சமாக எண்ணியதற்கு என்ன காரணம்….. அவருக்கு தெரிந்திருந்தது….”அரியணை ஒன்றும் சுகமானது அல்லஎன்று. முட்படுக்கையில் நித்திரை செய்வதற்கு  ஒப்பாகும் எனவும் அவர் நினைத்திருக்க கூடும். காண்க  கௌதம புத்தர்
      அரியணையை விட உயர்ந்த்து இவ்வுலகில் உள்ளது என்றும், அதை தேடிப்பிடிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கலாம். அந்த ஆவல்தான் சித்தார்த்தன் என்ற இளவரசன் புத்தனாக பூரணத்துவம் பெற்று காலங்காலமாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அரியணையில் இருப்பவர்கள் காலங்காலமாக வரலாற்றில் இடம்பெறவில்லையா? என்ற கேள்வி எழக்கூடும்.
            புத்தனின் வரலாற்று சுவட்டின்முன், அரியணையின்மீது அசைப்படுபவர்கள் வரலாறு செல்லாக்காசாகத்தான் நிற்கும்.
           நம்நாட்டிலும் ஒருவர்அவர்தான். ஒரு பெரிய வணிகரான திருவெண்காடர்சுகபோகங்களில் திளைத்து வந்தார்.….வணிகம் செய்ய தன் பிள்ளையை திரைக்கடலுக்கு அப்பால்அனுப்பினார் தந்தை.  ”தன்னைக் காட்டிலும் வணிகத்தில் மிக சிறந்தவனாக விளங்குவான் என்று எண்ணிய தந்தைக்கு மாறாகஒரு கப்பல் முழுவதும்வெறும் வரட்டித்துண்டுகளை மூட்டைகளாக கொண்டுவந்து வீட்டில் இறக்கினால்…..தந்தைக்கு கோபம் வருமா? வராதா?...அவருக்கும் கோபம் வந்தது.    ”பிள்ளையைக் கூப்பிட்டுஎன்ன  கொண்டுவந்தாய் என்று கேட்க வரட்டித்துண்டுகளை காட்டினான். பிள்ளை… ”ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க பிள்ளையோ……”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  சொல்லை ரத்தின சொல்லாக உதிர்த்தான காண்க பட்டினத்தடிகள்
            அவ்வளுவுதான்……”மாடமாளிகைகூடகோபுரம்…..அத்தனையும் துறந்து காவிஉடை தரித்தவர்தான் பட்டினத்தடிகள்
             புத்தனுக்கு…. ” நிலையில்லாதவைகளே நம்மை ஆட்சி செய்கின்றன என்றும் ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றும் புரிந்து துறவறம் பூண்டார்
            பட்டினத்தடிக்கோ……சுகபோகத்தில் மூழ்கினாலும்….சொத்துக்களில் புரண்டா
லும்…..கடைசியில் ஒன்றுமில்லை என்று புரிந்து துறவறம் பூண்டார்
எதற்கு இந்த நேரத்தில் இந்த கதை என்கிறீர்களா? ”தேர்தல் நேரத்தில் ஆயிரம் கோடிஆறுநூறு என்றார்களே“““ அதுதான் இந்த ஆக்கத்திற்கான தூண்டுதல்.
இனிய-கவிதை-உலா
அரியணை


15 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருமைக்ககும், கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. பதில்கள்
  1. மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. பதில்கள்
  1. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதுபோல உள்ளது தங்களின் பாராட்டு...நன்றி

   நீக்கு
 5. அவனவன் நூறுக்கே லோலோன்னு அலையுறான் ,பிறகேன் கோடி கோடியாய் சேர்த்து ஏமாற்ற மாட்டாங்க ?கொண்டு போவது ஒன்றுமில்லை என்றாலும் சுக போகம் தேவைப் படுத்தே அவர்களுக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுகபோகமும் அளவுக்கு அதிகமானால் ? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...