சனி, 11 ஜூன், 2016

இப்படியும் எழுத்தாளர்கள்

                     

     எழுத்தாளர்-ன்னா, நீங்க ஒரு மாதிரி கற்பனை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது, ஒரு பைஜாமா, ஜிப்பா போட்டு. மூக்கு கண்ணாடி போட்டிக்கிட்டுவானத்தை வெறிச்சு பார்த்துக்கனேசதா சிந்தனையில இருக்கிறவங்கன்னுதான்நினைச்சிருப்பீங்க. 
  அதெல்லாம், உடைத்தெறியறமாதிரி எழுத்தாளர்கள் இருக்காங்கன்னா,….நம்பவா போறீங்கநம்பித்தான் ஆகணும்.
எமக்கு தொழில் எழுத்து-நூல் நயம்
எமக்கு தொழில் எழுத்து-நூல் நயம்
       நாற்பது ஈய வட்டகை நூற்றம்பது பிளாஸ்டிக் சேர்கள் இத்யாதிகளோடு தொழில் நடத்துபவர்ஒரு எழுத்தாளர்-ன்னா ஆச்சிரியமாத்தானே இருக்கும். அவர்தான் எழுத்தாளர் காமுத்துரை.
       கையில மண்வெட்டி, தலையில கட்டின தலைப்பாக்கட்டு, ஒடிசலான தோற்றம். இப்படி ஒருத்தர் அவர் பேரு சி.எம். முத்து..
              நெல் உமி நிரப்பின அடுப்பு, அதை ஊதற ஊதாங்குழலோடுஒருத்தர், இவர் கையில பேனா. இல்லை. இவரும் எழுத்தாளர்தாங்க.. பேரு தாணு.பிச்சையா.
              லேத் பட்டறையோட உறவாடிக்கிட்டிருக்கிற இந்த மனுஷன்…” நாளைக்கு நான் இல்லாமபோனாலும்.. என் பேரு சொல்ல என் எழுத்து இருக்குன்னும்.. இதுக்கும் மேல ஒரு சாமானிய மனுஷன்ன்னு மனஉறுதியா சொல்ற இவரு எழுத்தாளர் ஆசு.
              இன்னொருத்தரோ…. ”பழவியாபாரத்துல மும்முர ஈடுபட்டுகிட்டுசிறுகதை எழுத்தாளாராகவும் மின்னிக்கிட்டு இருக்கிற இவருக்கு… ” கொஞ்ச காலம் பார்வை கொஞ்சம் மட்டாயிருந்து, சிகிச்சைக்கு பிறது சுதாரிச்சு கதைங்கள கலக்கறவருதேனி சீருடையான்.
              இரட்டை மாட்டுவண்டியைப் பூட்டிக்கிட்டு, வெறும் விவசாயத்தையே தொழிலாக வைச்சிக்கிட்டுகூட எழுத்தையும் ஆராதிக்கிறாருன்னாஅவரு பேரு எழுத்தாளர் சு. வேணுகோபால்.
              இப்படிதொழில்கள் வேறாக இருந்தாலும், எழுத்தையும், இலக்கியத்தையும் விடாமல் பிடித்துக் கொண்டும நிறையவே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் இதிலே விளக்கி விட்டால் புத்தகத்தை நீங்க படிச்சு ஆச்சரியபடாம போயிடுவீங்கன்னுதான்இத்தோட நிறுத்திட்டேன்.. 
  இன்னும் நிறைய பேர்களின் வாழ்க்கையின் வரலாற்றை உள்ளடக்கிய நூல்தான்எமக்குத் தொழில் எழுத்து”       ஆதனால, அனைவரும்சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளஎமக்குத் தொழில் எழுத்து” –ன்கிற புத்தகத்தை வாங்கி படியுங்கள். பலன் பெறுங்கள்.
புத்தக தலைப்பு- எமக்குத் தொழில் எழுத்து
நூலாசிரியர்    - வெ. நீலகண்டன்
(குங்குமம்வாரஇதழின் தலைமை நிருபர்
(இவரும் இப்போ கலக்கற எழுத்தாளர்தான்)
விலை- ரூ.100
சூரியன் பதிப்பகம்
229 கச்சேரி ரோடு, மயிலாப்பூர்
சென்னை-600 004.
அலைபேசி எண்.7299027361
http://kavithaigal0510.blogspot.com

12 கருத்துகள்:

 1. பொதுவாக இது வியப்புக்குறிய தகவல்தான் நண்பரே ஆனால் எனக்கல்ல....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலான கருத்துக்கு மிக்க நன்றி, உங்கள் பயணம் இனிதே அமைந்ததற்கு வாழ்த்துகள்

   நீக்கு
 2. பதில்கள்
  1. தளத்தினை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. கருத்தினை வழங்கலாமே

   நீக்கு
 3. மேலான கருத்துக்கு தலைவணங்குகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 4. எழுத்து எமக்கு தொழில் என்று உரிமையோடு சொல்ல ,பாரதிக்கு மட்டுமே உரிமையுண்டு :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...