திங்கள், 27 ஜூன், 2016

இன்னுமா தேடுகிறாள்

அழகழகான பொம்மைகளுடன்
ஆசையாய் விளையாடுகையில்..
ஆசையாய் அம்மா வந்து
நேசமாய் கட்டியணைத்தே
தம்பி பாப்பாவேண்டுமா ?
செல்லமே ! என கொஞ்சினாள்!
 
இனிய- கவிதை- உலா
இன்னுமா தேடுகிறாள்

அழகான பொம்மைகளுடன்
ஆசையாய் விளையாடியது
அலுத்து விட்டதால்…..
ஆசையாய் நானும்….
அழகான தம்பி பாப்பா
வேண்டுமென்றே சொல்லிவிட்டு
தூங்கி விட்டேன் !

நல்ல இருட்டினில்
கண்விழித்து பார்க்கையிலே
அணைத்து படுத்திருந்த…!
அம்மாவைக் காணவில்லை!

ஒருவேளை…. அம்மா
அழகான தம்பி பாப்பாவை
தேடிக் கொண்டிருக்கிறாளோ?
என்னவோ ?
இப்படி ஒவ்வொரு நாளுமே!

தம்பி பாப்பாவை
தேடட்டும்தேடட்டும்
என்றே
தூங்கி விடுவேன்  !
இன்னுமா தேடுகிறாள் அம்மா
அழகானதம்பி பாப்பாவை


8 கருத்துகள்:

 1. தேடல்கள் தொடரட்டும் தம்பி பாப்பா கிடைக்கட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. தம்பி பாப்பா வுக்கு முன்பிறந்தவர், பெண் என்றால் தம்பி பாப்பாவுக்கு இன்னொரு தாய்தான்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல வேளை,பிள்ளை பத்து மாதத்தில் கிடைக்கும் என்று சொல்லவில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைத்தளத்திற்கு வருகை புரிந்தமைக்கும்...கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...