வெள்ளி, 17 ஜூன், 2016

மனம் நிர்வாணம்!

ஆடையை விரும்பாதவர்
ஆருமுண்டோ ? அகிலத்தில்…. !

அணிந்து பார்த்து அழகு சேர்ப்பாளே!
அசைப் பெண்ணுக்கு ! பட்டாடை !
அம்மா


மனம் நிர்வாணம்
மனம் நிர்வாணம்
அப்பாவுக்கும் பிடிக்கும் !
அழகு ஆடைகள்

ஆயிரமாயிரம் ஆடைகள்
அணிவதென்பது அசைகள் !

ஆசையாடை போர்த்துவாள்
அன்பு காதலி !

அன்பாடை உடுத்துவாள்
அன்னை !
அறிவாடை வழங்குவார்
அப்பா !

ஆர்ப்பாட்ட கோஷத்தோடு
அணிந்து கொள்வார் பொன்னாடை
அரசியல் வாதி !

ஆடைகள் களைந்தால்
உடல் நிர்வாணம் !
ஆசைகள் களைந்தால்
மனம் நிர்வாணம்

ஆடையா ? ஆசையா ?
களைவது என்பதில்
அவரவர் ஆசையே !


---- கே. அசோகன்.
மனம் நிர்வாணம்!மனம் நிர்வாணம்!ஆடையை-விரும்பாதவர்

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. ஆடை குறித்த உங்களின் அபிலாஷகள் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. நல்ல வர்ணனையான வரிகள் அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. கவிஞரின் 'ஆடையின்றி பிறந்தோமே ,ஆசையின்றி வளர்ந்தோமா 'பாடல் வரிகள் நினைவுக்கு வருதே :)

  பதிலளிநீக்கு
 5. கவிஞரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தால் நல்லதே. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...