வியாழன், 5 மே, 2016

கொடிக் கட்டி பறக்கணுமா?

kavithaigal0510.blogspot.com
கொடிக் கட்டி பறக்கணுமா?
  எல்லா மரத்தடியிலும், பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அவரை மூன்று சுற்று சுற்றினாலே போதும், அவருக்கு துளசி மாலையை தவிர்த்து, அருகல்புல் மாலையை சாத்துங்கள். அருள் தானா கிடைக்கும். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு     நீங்கள் சாப்பிட உட்காருகிறீர்களா?

இதைப் படித்து விட்டு அப்புறும் சாப்பிட உட்காறதைப் பத்தி யோசிக்கலாமே!
            கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து சாப்பிட்டால்--- ”ஒங்களுக்கு நீண்ட ஆயுள்தான்”
            நிறைய சாப்பிடணும்-ன்னா, மேற்கு திசையைப் பார்த்து உட்காருங்கோ.
            ”ஒங்க புகழ் கொடிக்கட்டி பறக்கணும்-ன்னா, தெற்கு திசையைப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடுங்கோ”
            ”ஒங்களுக்கு பொருள் நஷ்டம், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தவிர்க்க, வடக்கு திசையைப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
            அப்புறம், இடது கையால், பரிமாறுவதையும், நீங்களே இடதுகையால் பரிமாறுவதையும் தவிர்த்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது.
            ”என்ன இவர், பிள்ளையாரில் ஆரம்பித்து, சாப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் என்றுதானே யோசிக்கிறீர்.
            ”பிள்ளையாரும், சாப்பிட்டு…சாப்பிட்டு தொந்தி பெரிசா இருக்குதில்லையா? ஆதனால்தான்.
             வயிறு பெரிசா இருக்கறதைப் பார்த்து பொறாமைப் படுவார்கள் இல்லையா? அதற்கு, வீட்டு வாசலில், மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாவிலைகள், பிறரின் கண்திருஷ்டியை தடுக்கும் ஆற்றல் உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவிலைத் தோரணத்தை மாற்றுங்கள். உங்கள் வாழ்வு அமோகம்தான்.

4 கருத்துகள்:

 1. ஓட்டு வாங்கிப்போயி ஏமாத்திருவங்கே எல்லாம் ரத்தம் கக்கி சாகனும் அதுக்கு ஒரு வழியும் சொல்லவில்லையே அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாறும் மக்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி, தங்களின் ஆசை விரைவில் நிறைவேறும்.

   நீக்கு
 2. இப்படி வேற சங்கதி இருக்கா இனி மாவிலைதோரணம் கட்டணும் வாசலில்[[ ஆனாலும் அன்னிய தேசத்தில் அதுக்கான சூழல் அரிது அரிது!

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...