செவ்வாய், 3 மே, 2016

ஆசையலை !

சுரும்புசெரி மலர்சூடி சொகுசாய் நடைபயின்று செவ்வரி விழியாலே பார்த்தாய்! – அழகு சிற்றிடையில் மின்னலை ஏன் சேர்த்தாய்!
ஆசையலை !
கார்மேகம் குடிகொண்ட
கன்னியுன் கருங்குழல்
ஏர்தனை என்னவென சொல்லுவேன்– என்றன்
ஏந்திழையே இன்பத்திலே வெல்லுவேன்!

சுரும்புசெரி மலர்சூடி
சொகுசாய் நடைபயின்று
செவ்வரி விழியாலே பார்த்தாய்! – அழகு
சிற்றிடையில் மின்னலை ஏன் சேர்த்தாய்!

பெண்ணினமும் ஆசைகொள்ளும்
பேரழகு சித்திரமே
மின்னும் தமனியமடி அங்கம் –உன்
மென்நகையில் ஆசையலைப் பொங்கும்!

மலர்க்கணை விடுத்த
மெல்லியளே பூவிதழ்
சேர்த்(து) மெல்அமிர்தினை வார்த்திடடி! –அன்பு
சேயிழையே என்னிதழொடு சேர்த்திடடி!

--- கே. அசோகன்.


ஏர் – அழகு
சுரும்புசெரி – வண்டுகள் மொய்த்த
மின்னும் தமனியம் – ஒளிவிடுகின்ற தங்கம்
மெல்லி – பெண்
மெல்அமிர்தினை – மெல்லிய அமுதுபோன்ற எச்சில்
http://kavithaigal0510.blogspot.com

ஆசையலை !

4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...