வியாழன், 7 ஏப்ரல், 2016

நவரச புதினம்


                நவரச புதினம்

சிற்பி வடிக்கா ஓவியம்அவள்
செந்நாப் புலவரின் காவியம்!
கற்றைக் குழலதில் மேகம்! – உழல்
கண்களால் கண்டால் யோகம்!                           பிரம்மன் வரைந்தது பெண்ணுருகண்டு              பிரமித்து கரையுது என்னுரு!
                 

                   மலரினும் மெல்லியதே பாதம்வாய்
மழலை மொழி இனியதொரு கீதம்!
உலவிடும் நிலவே வதனம்! –
உண்மையில் நவரச புதினம்!
                            நாண்முகன் வரைந்தது பெண்ணுருகண்ட
                            நாள்முதல் கரையுது என்னுரு!
                  இடைதனில் ஒளிருமே மின்னல்எழில்
இன்பமதோ ஊற்றில் இனிக்கும் கன்னல்!
நடைதனைப் பயிலுமே அன்னம்! – அவள்
நளினமதில் மயிலென்ன பண்ணும்!
                              பிரம்மன் வரைந்தது பெண்ணுருகண்டு
            பிரமித்து கரையுது என்னுரு!
                  வெண்டைவிரல் மீட்டிடுமே வீணை! - அவள்
வெள்ளரி பிஞ்சுக்கே இணை!
தண்டைதனில் ஒலித்திடும் தாளநயம்! – அழகு
தமிழணங்கே இனிய பூபாளம்!
                         நாண்முகன் வரைந்தது பெண்ணுருகண்ட
                        நாள்முதல் கரையுது என்னுரு!

----கே. அசோகன்
      நன்றி - பொன்னகரம்சிற்றிதழ்

             நவம்பா் 1983

7 கருத்துகள்:

 1. புதிய பரிமாணம் நன்று நண்பரே
  ஆஹா இந்தப்புகைப்படத்தை நான் பதிவுக்கு தேர்வு செய்து வைத்துள்ளேனே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு மிக்க நன்றி, புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் ஆட்சேபம் ஏதுமில்லை

   நீக்கு
 2. இந்த பெண்ணுருவைப் படைத்தவர் ஓவியர் மாருதி போலிருக்கே !உங்கள் கவிதையும் அதைப்போலவே அழகு :)

  பதிலளிநீக்கு
 3. தங்களின் மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...