செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சத்குரு யார் ?

சத்குரு யார் ?
சத்குரு யார் ?                                       கலிகாலத்துல நம்ம கஷ்டத்தை யாருகிட்டேயாவது சொல்லி மனசை தேற்றிக் கொள்வது சகஜம்..   தேடி போவது ஆசிரமாக இருக்கும்.  ஆசிரமத்திற்கு போய்ஜயா, சாமீ, எனக்கு அந்த குறை இருக்குது, இந்த குறை இருக்குது”  நிவாரணம் சொல்லுங்கோஅப்படின்னு பவ்யமாய் நிற்போம்
.

                அப்படி நிற்கும் நம்மிடம்……..….…
           ”இந்தாப்பா!, இந்தாம்மா!, நீ மகாபாரதம் படி, கீதையை படின்னு சரியாயிடும்ன்னு சொல்லி ஆறுதல் படுத்துவாங்க. அத்தோடு, இந்த கோவிலுக்கு போ, அந்த கோவிலுக்கு போஅப்படின்னும் சொல்வாங்க. இவங்க பேருதான், மதகுருமார்கள். அபிராமி பட்டரும், இராமகிருஷ்ண பரமஉறம்சரும் மதகுருமார்களே. இருந்தாலும், இறைவனின் கருணைக் கடாட்சத்தால் பெரும்பேறு பெற்றனர்.
     . இந்த பிரணாயாமம், இந்த யோகா கத்துக்கோ-ன்னு, ”ஒரே மாசத்தில் ஒனக்கு சைனஸ் போயிடும், தலைவலி காணாம போயிடும். இதயநோய் இல்லாம போயிடும்-ன்னு,  கத்துக்குடுத்துட்டு, டொனேஷன் சீட்டை நம்மிடம் நீட்டுபவர்கள், காரிய குருமார்கள்.
           ”ஏம்பா, இந்த மரத்தடியில அன்னைக்கு ஒரு சாமீயைப் பார்த்தோமே!  எங்கே போயிட்டார்? -ன்னு தேடிப்பிடித்து போனால், துரத்தி துரத்தியடித்து, நம்மளைப் பக்குவப்படுத்திய பின்,  ஒருநாள்  ”இந்தா பிடிச்சுக்கோஅப்படின்னு சில வித்தைகள் சொல்லி தந்துவிட்டு காணாமல் போய் விடுபவர்கள்தான் காரண குருமார்கள். இவர்கள் மற்றவர் கண்களில் இருந்து மறைந்தே வாழ்வார்கள்.
            இதுவரைக்கும், நீங்கதானே தேடிப்போனீங்க, நீங்க முழுசா பக்குவமாயி…. விவேகானந்தர் மாதிரி ரெடியாயிட்டிங்கன்னா….  அவரே தேடி வந்து,  கடைத்தேற்றுபவர்  பேருதான்  சத்குரு.
           ”என்ன தேடி போக போகிறீங்களா? ஒங்களை தேடி வருகிற மாதிரி பக்குவப்படுத்திக்க போறீங்களா?
கேட்டதில் பிடித்தது                         --- கே. அசோகன்.
நன்றி பதிணென் கவனகர்
                இராமகனகசுப்புரத்தினம்     
                                                         

           சத்குரு யார் ?சத்குரு யார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...