புதன், 20 ஏப்ரல், 2016

தாயானவள்


தாயானவள்

ஆலிலை மாதவன் அருகினில் அமர்ந்தவள்
அலைமகள் வடிவானவள்
காலத்தால் அழியாத காவியம் யாவிலும்
கலைமகள் என ஆனவள்

மாலையைச் சூட்டியே மகிழ்வாக ஆடிடும்
மகேசனின் உமையானவள்
நாளையப் பொழுதினும் நல்லவை ஆக்கிட
நல்சக்தி பல வடிவானவள்

மஞ்சளிலே விளையாடி வேம்பதனில் உறவாடி
மாவிளக்கினில் மருளாடுபவள்!
கொஞ்சுகிளி குரலாடி கோவைஇதழ் சிரிப்பாடி
கண்ணசைவில் மீனானவள்!

அருளாடி மருளாடி ஆர்ப்பரிக்கும் அரிமாவின்
அரியணையில் அருளானவள்!
விரும்பாத பேருக்கும் வினைகள் போக்குகின்ற
பேரன்பு தாயனவள்!

கே. அசோகன்.
http://kavithaigal0510.blogspsot.com


6 கருத்துகள்:

 1. நண்பரே அருமையான வரிகள்
  பக்தி கவிதை அழகு....

  பதிலளிநீக்கு
 2. தாயானவளிடம் குழந்தையாவோம் நண்பரே பக்தி மாலை அருமை ரசித்தேன் வாழ்த்துகள்.
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  பதிலளிநீக்கு
 3. அருமையான பகிர்வு

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி, எப்படி இணைப்பது விளக்குங்களேன்

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...