வியாழன், 21 ஏப்ரல், 2016

கணக்கு - சிறுவர் சிறுகதை

இனிய கவிதை உலா

                             


முதுகில் இருந்த ஸ்கூல் பேக்கை சோபாவின் மேல் விட்டெறிந்தான்,      ஹைய்யா, ஸ்கூலுக்கு லீவு விட்டாச்சு, ஜாலிதானே” துள்ளி குதித்தான் மூன்றாம் வகுப்பு  முடித்த விஷால்.
      

சந்தோஷத்தில், சாப்பிடவில்லை, ஸ்மார்ட் போன்  வீடியோ கேமில் மூழ்கிவிட்டான்.
                மாலையில், ஆபிஸில் இருந்து வந்த அப்பா, ”விஷால் கண்ணு, பரிட்சை நல்லா எழுதினியா” கேட்டு விட்டு, ஒரு நாலு நாளைக்கு நல்லா இஷ்டம்போல விளையாடுறா, கண்ணா!.
                அப்புறம், ”ஒன்னைய அபாகஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ்” இதிலே சேத்துவிடுறேன், நல்லா கத்துக்கணும்டா, செல்லம்” என்று கொஞ்சினார் விஷாலின் அப்பா.
                விஷாலின் சந்தோஷம், காணாமல் போனது..
                நாலு நாட்களுக்கு பிறகு, விஷால் அபாகஸ் கிளாஸ்க்கும், மியூசிக் கிளாஸ்க்கும் போய் வந்தான். அபாகஸ்ஸில் நன்றாக கணக்கு போட்டான், மியூசிக்கிலும் புகுந்து விளையாடினான். ஆனால், முகம் மட்டும் வாட்டமாகவே இருந்தது.
                அப்போது, விஷால் அப்பாவின் செல்போன் ஒலிக்க ”என்னப்பா, ராகவா,ஸ்கூல் லீவு விட்டாச்சில்லே, குழந்தையைக் கூப்பிட்டுக்கிட்டு ஒருநடை ஊருக்கு வந்தாதான் என்ன?” என்று இராகவனின் அம்மா கேட்டாள்.
                ”அம்மா, ”நாங்க வர்ற வெள்ளிக்கிழமை சாயங்காலம், ஊருக்கு புறப்பட்டு வர்றோம்மா” என்றான்” ராகவன்.
           , கேட்டுக் கொண்டிருந்த விஷால், ஓடிப்போய்,  உறாலில் தொங்கி கொண்டிருந்த காலண்டரை எடுத்து, ”வெள்ளிக்கிழமை என்று வருகிறது என சந்தோஷத்தோடு கணக்கு போட்டான் விஷால்,,
                                           --- கே.அசோகன்.


8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தற்போதைய நடைமுறை இப்படித்தானே உள்ளது. ஆதலால் இக்கதையின் மூலமாவது நன்மை கிடைக்கலாம் விஷாலுக்கு

   நீக்கு
 2. கதையில் உண்மை நிலைப்பாடு வாழ்த்துகள்.
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தளத்திற்கு நான் புதிது. தங்களைப் போன்றவர்கள் ஊக்கப்படுத்தினால், இன்னும் சிறப்பாக முயற்சிப்பேன். நன்றி

   நீக்கு
 3. நண்பரின் கணக்கு அருமை
  சிறுகதை கணக்கு உண்மை...

  பதிலளிநீக்கு
 4. போட்டிகள் நிறைந்த உலகம் ஆனதால் பிள்ளைகளின் சந்தோசமும் பறி போய் விட்டதே :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...