சனி, 2 ஏப்ரல், 2016

மங்கல நாணொன்று

மங்கல நாணொன்று கட்டிவிடு
  
கதிரவன் ஓய்வுறும் வேளையிலே-சுவை
கனிகள் நல்கிடும் சோலையிலேஅன்பு
     காதலியே கற்கண்டு
     கனியிதழ் சுவைக்காய் காத்திருந்தேன்-விழி
                         பூத்திருந்தேன்!


மதியும் மேகமதில் உலவிடும் போதுஇதழ்
மதுவோடு வந்தாயே மாதுகனிச்சாறே
      கவிச்சுவையாய் கன்னத்திலே
      கன்னல் முத்தங்களை ஈவாய்- அழகு
                          பாவாய்!

ஏன் அத்தான் உங்கட்கு இவ்வேகம்நாண்
ஏறியபின் சொந்தமன்றோ இத்தேகம்நன்னாள்
     கூடிடும் பொழுதினில்
     கூடிடும் காலமதைப் பார்ப்பீர்இதழ்
                       சேர்ப்பீர்
நான்கூட இரவினிலே உறங்கவில்லைஇ்ன்ப
நாயகனே உன்பால் கிறங்குகிறேன்கடி
     மணம்புரிய மஞ்சளில்
     மங்கல நாணொன்று கட்டிவிடு- எனைக்
                       கட்டிலிடு!
      

---- கே. அசோகன்.2 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...