திங்கள், 18 ஏப்ரல், 2016

கற்பனையும் ஏதுமில்லை!

கற்பனையும் ஏதுமில்லை!
கற்பனையும் ஏதுமில்லை !
கானகத்து குரங்குகளுக்கு
கவலைகள் ஏதுமில்லை!
வானத்து பறவைகளுக்கும்
வஞ்சமும் ஏதுமில்லை !
துள்ளியோடும் மீன்களுக்கோ
துளி-கவலை ஏதுமில்லை
கள்ளமில்லா குழந்தைகளுக்கு
கற்பனையும் ஏதுமில்லை !

நானிலத்தில் வாழ்வோருக்கே
நால்வகையாய் கவலைகளுண்டு!
நானே நல்லவன் நானே வல்லவன்
வீணே புலம்பி பொருமுகின்றான்

கவலைகளும் இல்லாமல்
வஞ்சகமும் இல்லாமல்
களித்திருப்போம் நாமெல்லாம்
காலங்கள் ஏதுமில்லையே !

10 கருத்துகள்:

 1. அருமை :-)

  ஆனால் குழந்தைக்கு கற்பனையுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், உண்மைதான். ஆனால் நான் எழுதியது எதிர்கால கற்பனை என்ற அடிப்படையில்

   நீக்கு
 2. ஆறறிவு ஐந்தறிவிடம் கற்றுக் கொள்ளனும் போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், இயற்கையிடம் கற்றுக்கொண்டு இயற்கையை அழிக்கிறோம் நண்பரே. தங்களின் கருத்துக்கு தலைவணக்கம்

   நீக்கு
 3. நிலவுக்குத் தெரியுமா வானின் உயரம்? மீனுக்குத் தெரியுமா நீரின் குளுமை? அவை அவை அதனதன் எதிர்பார்ப்பில்லா இயல்பில்.. அதேபோல் மனிதனும் இருந்தால உயரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் மகிழ்ச்சி

   நீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...