ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

இருபதிலும் அறுபதிலும்


இருபதிலும் அறுபதிலும்இருபதிலும்..ஆறுபதிலும்
இறுமாப்போடு எகிறுவான் இருபதில்
அறுபதிலோ அடங்கி அமைதியாவான்!
மீசையை திருத்துவான் இருபதில்!
ஆசையைத் திருத்துவான்! அறுபதில்
பெண்ணின் பின்போவான் இருபதில்!
பெண்ணுக்கு துணையாவான் அறுபதில்!


இணைக்காக ஏங்குவாள் இருபதில்
துணையாய் இருப்பாள் அறுபதில்!
ஆசையாய் தேடுவாள் இருபதில்!
ஆளுமைத் தேடுவாள் அறுபதில்!
ஆணின்பின் போவாள் இருபதில்!
அரவணைப்பாள் ஆணை அறுபதில்
இருபதிலும்…அறுபதிலுமாக… ஆண்…பெண்..!
இதெல்லாம் இயல்பாய் நடக்கிறதே!

--- கே. அசோகன்.
இருபதிலும் அறுபதிலும்

8 கருத்துகள்:

 1. "மீசையை திருத்துவான் இருபதில்!
  ஆசையைத் திருத்துவான்! அறுபதில்" என
  அழகாகச் சொன்னீர்கள்

  இப்ப தளம் நன்றே மின்னுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒத்துழைப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. மனதை தொட்ட வரிகள் நண்பரே...
  வாழ்க்கை வரிகள் அருமை நண்பரே ...

  பதிலளிநீக்கு
 3. இருபதிலும்…அறுபதிலுமாக… ஆண்…பெண்..!இதெல்லாம் இயல்பாய் நடப்பதுதானே...அய்யா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயல்பாய் நடப்பதுதான், உண்மை, மனதில் உள்ளதை கவிதையாய் வடித்தேன்.

   நீக்கு
 4. தலைப்பில் இருக்கும் ஆறு பதில் என்பதும் பொருத்தமே ,இருபதுக்கு நீங்க சொன்னதும் அறுபதுக்கு பதில் போலத்தானே இருக்கு :)

  பதிலளிநீக்கு
 5. முதல் ஆறு வரிகள் பெண்ணுக்கும், அடுத்து வரும் ஆறு வரிகள் ஆணுக்குமானது நண்பரே. கருத்திற்கு மிக்க நன்றிஜீ

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...