சனி, 30 ஏப்ரல், 2016

கண்ணன் நல்லவனா ?

எல்லோரும் தலைமேல் தூக்கிவைத்துக்  கொண்டாடுகிறார்கள், இனிய கண்ணனை. ஆனால், அவன் செய்த காரியம் என்ன? நெஞ்சம் பதைபதைக்கிறது. கண்ணன் நல்லவனா?  என்பதுதான் தலையாய கேள்வி.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

சாபம் - சிறுகதை

மலைச்சரிவில் உள்ள  கிராமத்திற்கு மேடுபள்ளங்கள் நிறைந்த  சாலையில், காய்கறி மூட்டைகள் துணி மூட்டைகள் என ஏகப்பட்ட மூட்டைமுடிச்சுகளுடன் குலுங்கியும் சாய்ந்தும் போய் கொண்டு இருந்தது  பேருந்து.
ரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. ஒரு வயதான பாட்டியும்>  கூடவே ஒரு   பருவவயது பெண் ஒருத்தியும் அது அவள் பேத்தி போல இருந்தாள். அவா;கள்   ஏறினார்கள். . ஏறியவுடன் கடைசி இருக்கைகளில் ஒன்று மட்டுமே அதிசயமாக காலியாக இருக்க

முடிவும் முடிவாகும்

முடிவானது முன்பே
இராமன்
காடேக வேண்டுமென்று….
நிறைவேறியது
கைகேயியின் வரங்களாலே!

வியாழன், 28 ஏப்ரல், 2016

நானா இல்லை !


இனிய கவிதை உலா
ஏதோ…… ஏதோ…
கிறுக்கியதை
கவிதை என்றார்கள்!

கவிதை ஆனதால்…
என்னையும்………
கவிஞன் என்றார்கள்!

புதன், 27 ஏப்ரல், 2016

தண்ணீரின் பத்து கட்டளைகள்”இன்னா எரிச்சல், இன்னா எரிச்சல், இந்த வெயில் நம்மளை வாட்டுது”ன்னு எல்லாரும் புலம்புலாறங்க” பூமி வெப்பமயமாயிடுச்சு, ஆதனால, மரம் காணாம போயிடுச்சு, தண்ணீர் இல்லாம த த்தளிக்கிறோம்-ன்னு வெத்து புலம்பலா இருந்தா எப்படி?

சனி, 23 ஏப்ரல், 2016

புத்தக நாள் கவிதை


தங்கத்தில்
முதலீட்டை விட
மேலானதே
புத்தகங்களுக்கான
செலவுகள்!

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சிரிக்கவா போறீங்க ?

இனிய கவிதை உலா
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு”   நீங்க சிரிச்சிங்கன்னா…வீட்டுல இருக்கிற பாட்டிம்மா, அடியே, பொம்மளை சிரிச்சா போச்சு”ன்னு ஏகத்துக்கு கத்தும், சே, பாவம் அந்த காலத்து ஆளாச்சே”, சரி விட்டுடுவோம்.
               அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது, அது என்னான்னா… ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார், , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல், இடறி விழுந்துவிட்டார்..

வியாழன், 21 ஏப்ரல், 2016

கணக்கு - சிறுவர் சிறுகதை

இனிய கவிதை உலா

                             


முதுகில் இருந்த ஸ்கூல் பேக்கை சோபாவின் மேல் விட்டெறிந்தான்,      ஹைய்யா, ஸ்கூலுக்கு லீவு விட்டாச்சு, ஜாலிதானே” துள்ளி குதித்தான் மூன்றாம் வகுப்பு  முடித்த விஷால்.
      

புதன், 20 ஏப்ரல், 2016

தாயானவள்


தாயானவள்

ஆலிலை மாதவன் அருகினில் அமர்ந்தவள்
அலைமகள் வடிவானவள்
காலத்தால் அழியாத காவியம் யாவிலும்
கலைமகள் என ஆனவள்

மாலையைச் சூட்டியே மகிழ்வாக ஆடிடும்
மகேசனின் உமையானவள்
நாளையப் பொழுதினும் நல்லவை ஆக்கிட
நல்சக்தி பல வடிவானவள்

மஞ்சளிலே விளையாடி வேம்பதனில் உறவாடி
மாவிளக்கினில் மருளாடுபவள்!
கொஞ்சுகிளி குரலாடி கோவைஇதழ் சிரிப்பாடி
கண்ணசைவில் மீனானவள்!

அருளாடி மருளாடி ஆர்ப்பரிக்கும் அரிமாவின்
அரியணையில் அருளானவள்!
விரும்பாத பேருக்கும் வினைகள் போக்குகின்ற
பேரன்பு தாயனவள்!

கே. அசோகன்.
http://kavithaigal0510.blogspsot.com


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கண்ணனின் விளையாட்டு

கண்ணனின் விளையாட்டுகண்ணனின் விளையாட்டு
கண்ணனின் விளையாட்டு”மகாபாரத போரின் போது விஸ்வரூப தரிசனமும் தந்து, கீதை உபதேசம் கொடுக்க ஐந்து சகோதர்ர்களில் அர்ச்சுன னை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தான் கண்ணன்?
இதுதான் கேள்வி….. இதற்கு விடையாக இதோ…

திங்கள், 18 ஏப்ரல், 2016

கற்பனையும் ஏதுமில்லை!

கற்பனையும் ஏதுமில்லை!
கற்பனையும் ஏதுமில்லை !
கானகத்து குரங்குகளுக்கு
கவலைகள் ஏதுமில்லை!
வானத்து பறவைகளுக்கும்
வஞ்சமும் ஏதுமில்லை !
துள்ளியோடும் மீன்களுக்கோ
துளி-கவலை ஏதுமில்லை
கள்ளமில்லா குழந்தைகளுக்கு
கற்பனையும் ஏதுமில்லை !

நானிலத்தில் வாழ்வோருக்கே
நால்வகையாய் கவலைகளுண்டு!
நானே நல்லவன் நானே வல்லவன்
வீணே புலம்பி பொருமுகின்றான்

கவலைகளும் இல்லாமல்
வஞ்சகமும் இல்லாமல்
களித்திருப்போம் நாமெல்லாம்
காலங்கள் ஏதுமில்லையே !

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

இருபதிலும் அறுபதிலும்


இருபதிலும் அறுபதிலும்இருபதிலும்..ஆறுபதிலும்
இறுமாப்போடு எகிறுவான் இருபதில்
அறுபதிலோ அடங்கி அமைதியாவான்!
மீசையை திருத்துவான் இருபதில்!
ஆசையைத் திருத்துவான்! அறுபதில்
பெண்ணின் பின்போவான் இருபதில்!
பெண்ணுக்கு துணையாவான் அறுபதில்!


இணைக்காக ஏங்குவாள் இருபதில்
துணையாய் இருப்பாள் அறுபதில்!
ஆசையாய் தேடுவாள் இருபதில்!
ஆளுமைத் தேடுவாள் அறுபதில்!
ஆணின்பின் போவாள் இருபதில்!
அரவணைப்பாள் ஆணை அறுபதில்
இருபதிலும்…அறுபதிலுமாக… ஆண்…பெண்..!
இதெல்லாம் இயல்பாய் நடக்கிறதே!

--- கே. அசோகன்.
இருபதிலும் அறுபதிலும்

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தேன் கிடைத்திடுமோ !

தேன் கிடைத்திடுமோ?
     தேனீ கொட்டுமேயென்று
      துவண்டு விடின்
       தேன் கிடைத்திடுமோ ?
       ஏணியை எட்டிஉதைத்திடின்
        ஏறுவது உச்சிக்கு    எங்ஙனமே!

வியாழன், 7 ஏப்ரல், 2016

நவரச புதினம்


                நவரச புதினம்

சிற்பி வடிக்கா ஓவியம்அவள்
செந்நாப் புலவரின் காவியம்!
கற்றைக் குழலதில் மேகம்! – உழல்
கண்களால் கண்டால் யோகம்!                           பிரம்மன் வரைந்தது பெண்ணுருகண்டு              பிரமித்து கரையுது என்னுரு!
                 

வனம் !

வனம் - சிறுகதை
         மன்னா, நேற்றிரவு கொள்ளையர்கள் புகுந்து மக்களிடம் கொள்ளடையடித்து போய்விட்டார்கள்.
         எங்கிருந்து வந்தார்கள்? கள்வர்கள்.
         

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சத்குரு யார் ?

சத்குரு யார் ?
சத்குரு யார் ?                                       கலிகாலத்துல நம்ம கஷ்டத்தை யாருகிட்டேயாவது சொல்லி மனசை தேற்றிக் கொள்வது சகஜம்..   தேடி போவது ஆசிரமாக இருக்கும்.  ஆசிரமத்திற்கு போய்ஜயா, சாமீ, எனக்கு அந்த குறை இருக்குது, இந்த குறை இருக்குது”  நிவாரணம் சொல்லுங்கோஅப்படின்னு பவ்யமாய் நிற்போம்
.

திங்கள், 4 ஏப்ரல், 2016

நிரந்தர விடுதலை !

ஒரு நிமிட
தாமதத்துக்கு….
ஒற்றை ரோசா!

பத்து நிமிட
தாமதம்
பச்செனபளிச்
முத்தம்!

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மடித்து போடு !

மடித்து போடு
 உண்டியல் ஒன்றை வாங்கிவிடு
உண்மைத் தோழன் ஆகிவிடு
ஆபத்து நேரத்தில் உதவிடுமே

யாரிடம் கற்று கொள்வது ?

யாரிடம் கற்பது ?
அன்பை அம்மாவிடம் கற்று கொள்
அறிவை ஆசிரியரிடம் பெற்று கொள்
பண்பை அப்பாவில் படித்து கொள்

கோடையில் தோழனாய் !

மரங்கள்
நல்ல நல்ல மரங்களாம்!
நன்றாய் வளரும் மரங்களாம்
நல்ல நல்ல பழங்களை

சனி, 2 ஏப்ரல், 2016

மங்கல நாணொன்று

மங்கல நாணொன்று கட்டிவிடு
  
கதிரவன் ஓய்வுறும் வேளையிலே-சுவை
கனிகள் நல்கிடும் சோலையிலேஅன்பு
     காதலியே கற்கண்டு
     கனியிதழ் சுவைக்காய் காத்திருந்தேன்-விழி
                         பூத்திருந்தேன்!

தமிழுக்குத்தானே !

தூரிகையாற்
மன சுவற்றில்
எழுதி வைத்த
எழிலோவிய
காதலன்
மணமுடித்தான்
                       மற்றொருவளை…..                              
Related Posts Plugin for WordPress, Blogger...