சனி, 19 மார்ச், 2016

காசு வேணுங்களா காசு !

      ”காசு, பணம், துட்டு. மணி, மணி”-ன்னு ஒரு சினிமா பாடலைக் கேட்டிருப்பீர்கள். அந்த காசு உங்களிடம் தாராளமாக புழங்க வேண்டுமென்றால், மகாலட்சுமியின் அருட்பார்வை உங்கள் மேல் படவேண்டும். அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்து உங்களைத் தகுதியாக்கி கொள்ள வேண்டும் தெரியுமா ?
                தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும்.
                சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
                காலத்தைக் கண்போன்று மதிக்க தெரிந்திருக்க வேண்டும்.
                வரும் சந்தர்ப்பங்களை, (கொக்கு மீனைக் கொத்துவது போல) நழுவ விடாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
                உடனுக்குடன் வேலைகளை முடிப்பவராக இருத்தல் வேண்டும்.
                அனுபவசாலிகளிடம் உரிய அறிவுரையைப் பெற தயங்க கூடாது
                செய்யும் தொழிலில் பூரண ஞானம் பெற்றவராக இருத்தல் வேண்டும்
                நல்ல திட்டங்களில் வைப்புநிதியாக செலுத்தல் வேண்டும்.
                திட்டமிட்டு வருவாய்க்கேற்றவாறு செலவுகளை மேற்கொள் வேண்டும்
                செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பேதமைக் காணாதவர்களாக இருத்தல் வேண்டும்.
                இலாபத்தில் மகிழ்ச்சியும், நஷ்டத்தில் துயரமும் கொள்ளாதவராக இருத்தல் வேண்டும்.
                தன்னலம் கருதாதவர்களாக இருக்க வேண்டும்.
                கடன் வாங்குவதை தவிர்த்து, கடனற்ற நிலையில் வாழ்பவராக இருத்தல் வேண்டும்.
                இப்படியெல்லாம், நீங்க இருந்தீங்கன்னா, அப்புறமென்னமகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள்ளாறத்தான். பிடிச்சுக்க வேண்டியது நீங்கதானே!


நன்றிகுமுதம்  பக்தி ஸ்பெஷல்                   --- கே. அசோகன்.

4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...