வியாழன், 3 மார்ச், 2016

முருக வேல் !

வழிநடத்தும் முருகவேல்!
ஆறுமுகங் கொண்டு
சூரபதுமனை வென்று
வீறுநடைக்  கொண்ட வெற்றிவேல்!

நீறுமுகம் கொண்டு
நிறைஞானம் வழங்கிடும்
ஆறுபடைக் கொண்ட தணிகைவேல்!

தோகைமயில் அமர்ந்து
துணையாக துள்ளிவந்து
தேனும் தினைக்கு தேடிவரும் வேல்!

கானம் நிதம்பாடி
கற்கண்டு தமிழிசைக்க
ஊனிலும் உயிரிலும் உறையும் முருகவேல்

ஆணவம் அழிபடவும்
ஞானம் வசப்படவும்
வேலனைக் கைதொழது வேண்டுவோமே!--- கே. அசோகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...