புதன், 30 மார்ச், 2016

மனைவியை ஜெயிக்கணுமா ?

பெரிய ஞானிகளும், சித்தர்களும் ”எல்லாம் மாயை” என்பார்கள். ஒவ்வொரு செயலும் மாயையின் விளையாட்டு என்பார்கள்.
            மாயையை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல, என்றும் சொல்வார்கள்.
மனைவியை ஜெயிக்கணுமா ?            அதே போல, எல்லாம் மனைவிதான் என்பார்கள். இல்லறவாசிகள் . ஒவ்வொரு செயலிலும் மனைவி இருக்கிறாள் என்றும், மனைவியை வெல்வது அவ்வளுவு சுலபமல்ல, இன்னும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே! என்றும் புலம்புவார்கள்.
            ஆக, மாயையையும், மனைவியும் ஒன்று போல தோன்றுகிறதா? ஆம், அப்படித்தான் தோன்ற வேண்டும். அதுதான் இயல்பு
            மாயையிடம் போட்டி போட்டு வெல்ல முடியாது.            மனைவியிடமும் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. ஜெயித்தவன் தெருவின் அலைவான். தோற்றவன் குடும்பத்தோடு குதுகுலமாய் கொண்டாடுவான்.
            மாயையிடம் கொஞ்சியும் ஜெயிக்க முடியாது. கொஞ்சினால், மிஞ்சுகின்ற சுபாவம் மாயைக்கு உரித்தானது.
            மனைவியிடமும் அதிகமாய் கொஞ்ச முடியாது. அதிகமாய் கொஞ்சினால், ”என்ன பெரிசா ஏதோ தப்பு நடக்கறாப்பல தோணுதே” அதான் இந்த வழிசலா? கேள்வி பிறக்கும்.
            அப்ப என்னதான் செய்யறதுன்னு கேட்கறீங்களா?
            ”மாயையின் வழிக்கே போய், இறுதியில் அதனை வெல்வது. மாயையைக் கூட வென்று விடலாம். ஆனால்…….!
            மனைவியின் வழிக்கே இறுதியில் ஜெயிப்பது மாதிரி தோற்றம் கொடுப்பது”
            ஆக, மாயையும், மனைவியும் ஒண்ணு-ன்கிறது சரிதானே”

நன்றி- பதினன் கவனகர்

      இராமகனகசுப்புரத்தினம்     --- கே. அசோகன்.
மனைவியை ஜெயிக்கணுமா ?மனைவியை ஜெயிக்கணுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...