சனி, 19 மார்ச், 2016

விவரமான வீட்டுக்காரம்மா !

                                            பண்டிகை விசேஷ நாள் வந்தா வீட்டுக்காரம்மா, அருகம்புல்லை எடுத்துவா, மாவிலையை பறிச்சி தா, வாழையிலை வெட்டிக் கொடு-ன்னு கேட்பாங்க. அவங்க ஒங்களை விட விவரமானவங்க தெரியுமா ஒங்களுக்கு
                அருகம்புல் சாத்தி புள்ளையாரைக் கும்பிட்டா, அது நிலத்தை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.
                வீட்டு வாசலில மாவிலையைத் தோரணமாக கட்டி கும்பிட்டா, அது நீரை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.    
                 நடுவீட்டில், படையல் போடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், அது நெருப்பை வணங்குவதாக எண்ண  வேண்டும்.
               மஞ்சள் தண்ணியில வேப்பிலையைப் போட்டு கும்பிட்டாஅது காற்றை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.
                வெற்றிலை என்ற தாம்பூலத்தை வைத்து கும்பிட்டா, அது ஆகாயத்தை வணங்குவதாக எண்ண வேண்டும்.
                 சாமீ கும்பிடுங்கறோம் பேர்ல ஐந்து வகையான இயற்கை பூதங்களை அல்லவா வணங்குகிறார்கள் வீட்டுக்காரம்மா ! அப்புறம் ஏங்க அவங்க கோவீச்சிக்கிறீங்க
              

                                                                                                                கே. அசோகன்.
          ---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...