சனி, 12 மார்ச், 2016

விஷமே வரலாறாய் !

 விஷமே வரலாறாய் !

யுதாசின்
விஷவிதைகள்
சிரஞ்சிவியாய்
ஏசுவின் கருணை!

துணை புரிந்தன
சாக்ரடிஸ் சாவதற்கு!
வாழ்கிறார் வரலாறாய்

ஏழைக்கு வறுமை
சான்றோருக்கு சரிவு

என்றும் சஞ்சீவியாய்
காதல் தோல்வி!

எண்ணங்களே
விஷவிருட்சங்கள்
ஆகும்போது
விஷமெதற்கு?

நாகத்தின் நஞ்சு
விலை மதிப்பானதே!
அடுத்தவரை
தீண்டாத வரையில்!

விஷமாய்
மத துவேஷங்கள்!
மடிவது என்னவோ
மனிதர்களே!


n  கே. அசோகன்.

4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...