வியாழன், 18 பிப்ரவரி, 2016

சொக்குபொடி என்ன தூவினாய்

சித்திர பேரழகுகள்!
மாயக் கண்ணனின்
மந்தகாச புன்னகையில்
என்னதான உளதோ?
மயங்குகின்றனரே
மங்கையர்கள்!இராதையும்….மீராவும்
போதாதா?
இன்னும் எத்துணை
கோபியர்கள்
கொஞ்சுவதற்கு!

உன் மனமென்னும்
தொட்டிலிலில்
மங்கையர்களை
மழலைகளாக்கி
கொஞ்சி கொண்டிருக்கிறாய்

நீ சிரித்தால்
சிக்குண்டு போகும்
சித்திர பேரழகுகள்


சித்திர பேரழகுகள்
சிக்குவதற்கு
சொக்கு பொடி என்ன
தூவினாய்
சொல்லு கண்ணா !
சொல்லு!

---- கே. அசோகன்.


7 கருத்துகள்:

 1. கண்ணன் கடவுள் அவுதாரம் என்பதால்..கோபியர்கள் போதாதது.. ...

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. நண்பரே.. எங்கள் ப்ளாக் கேட்டு வாங்கிப் போடும் கதைப் பகுதிக்கு உங்களிடமிருந்து ஒரு சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.
  sri.esi89@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வலைத்தளத்தில் பதிவிட்ட சிறுகதை அனுப்பலாமா ? அல்லது வேறுகதை அனுப்பலாமா ? தெரிவித்தால் உடன் அனுப்பி வைக்கிறேன்

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...