திங்கள், 27 நவம்பர், 2017

அரியாசனம்- தினமணி கவிதைமணி தந்த தலைப்பில்

அரியாசனம்- கவிதைமணி
                                சித்தார்த்தன் அரியணை துறந்த தாலே
                                சீர்மிகு புத்தனென்றே புகழ் பெற்றார் !
                                பத்துதிங்கள் சுமந்தவள் கரு வறையும்
                                பாரினில்  சிறந்த அரியணை யாம்!
                                கத்துங்கடல் ஆழத்திலே மூழ்கி யுள்ள
                                கடற்சிப்பி  முத்துதனின்  அரியணை யாம்!
                                கானகுயில் இடுகின்ற  மூட்டைக்கு தான்
                                காகத்தின் கூடே நல்ல அரியணை  யாம்!
அரியாசனம்
அரியாசனம்

செவ்வாய், 7 நவம்பர், 2017

எலியும் பூனையும் -சிறுவர் பாடல்

எலியும் பூனையும்- பொம்மி இதழில் வெளியான சிறுவர் பாடல்
எலியும் பூனையும் சிறுவர் பாடல்

வெள்ளி, 3 நவம்பர், 2017

கருப்பும் சிவப்பும்

கருப்பும்சிவப்பும்
கரியநிற பொருட்களையே கண்டு விடின்
காத தூரம் ஓடிடுவான் கார்மேகம் தான்
கரும்மேக கூட்டத்தை காணா மலே
கூட்டுப் பறவையென முடங்கி டுவான்
கருமைநிறக் கண்ணனின் எழிலைக் கூட
கண்கொண்டு பார்க்கவே தயங்கி டுவான்
கரியநிற வேழத்தின் அருகில் கூட
கணநேரம் நிற்காமல் நகன்றிடு வானே!
இனிய கவிதை உலா
கருப்பும் சிவப்பும்

கரியநிற மென்றாலே ஏனோ கார்மேகம்
காத்தூரம் ஓடுகின்றாய் என்றே வினவி
கரியநிற குயில்தான் அழகாய் கூவும்!
காதோரம் அதனினிமை நன்றாய் கேட்கும்
கரியநிற காக்கையே பகிர்ந்(து) உண்ணும்
கருத்தாக சொன்னால் காதிலே விழாது
கரியநிற பெண்ணொருத்தி கண்ட ஓர்நாள்
கருப்பியென கேலிசெய்து ஒதுக்க லானான்

 கரியநிற மேகம்சூழ் மாலைப் போழ்தில்
 கானகத்து மலைப் பாதை தன்னில்
 சரிவான பாதையிலே சறுக்கும் போது
 சட்டென கரம்தந்தவள் கரிய நிறத்தாளே!
 அரிதான அந்திமஞ்சள் பொழுது தன்னில்
 அகண்டதொரு பள்ளத்திலே விழுந்துவிட
 சிரித்தே சிவந்தவள் கேலி செய்தாளே!
 நிறம்கருப்பின் நேர்மை தெரிந்த வானான்!திங்கள், 16 அக்டோபர், 2017

கூடுகள் தேடும் பறவைகள் தீபாவளி கவிதை

              நீண்டு கிடக்கும் சோக பாதையில்
                                நெளிந்தே வளைந்தும் போகின்றான்
                                வேண்டும் கடவுள்கள் எல்லாம்
                                வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
                                ஆண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
                                அதையே தீபாவளி என்றழைப்போம்
                                தீண்டா இன்பம் தேடும் ஏழைக்கோ
                                தீபாவளி விழா  தீராவலியாகும்

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அன்பின் சொற்கள்

உள்ளிருக்கும் ரோஜாவில் முள்ளிருப்பு
உளமெல்லாம் அவளின் நினைப்பு
கள்ளிருக்கும் பார்வயாலே அழைப்பு
கனிந்துவிட்ட அன்புக்கா எதிர்ப்பு
புள்ளிருக்கும் சோலையிலே சலசலப்பு
பூங்கொடியாள் நெஞ்சினிலே சலசலப்பு
கள்ளியவள் பூத்தாளே புன்சிரிப்பு
கணநேரம் காணாவிடின் மனந்துடிப்பு

கவிஞர் கே. அசோகன்.

 
அன்பின் சொற்கள்
அன்பின் சொற்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஊர்சுற்றினார்


ஒரு மூக்கு கண்ணாடி
 ஒரு முழத்துண்டு
 இடையில்
ஒரு ஊன்றுகோல்
 நடக்க
இதுவே அடையாளம்
மகாத்மா காந்திக்கு
ஊர்சுற்றினார்
சுதந்திரம் பெற்றுத்தர

இப்பொழுதும் ஊர்சுற்றுகிறார்
பணமென்னும் தாள்களின் வழியே !
 --கே. அசோகன்.

வியாழன், 5 அக்டோபர், 2017

தத்துவம் பாஸ்

பூவுல சிக்குன நார் மணக்கும்
                சேத்துல சிக்குன கார்டயர் நாறும்


     இலட்சம் ரூபாய் முதல் போட்டா முதலாளி
     இலட்சியம்ன்னு வாய்-முதல் போட்டா அரசியல்வாதி


     சோப்பு போட்டா நுரைக்கும்
     ஆப்பு வைச்சா நுரைக்குமா ?

     மாய்ஞ்சு மாய்ஞ்சு மேக்கப் போட்டாலும்
     மசக்கைக்குப் பின்னால அழகு மட்டுதான்!

                அம்மா-ன்னு வாய்நிறைய கூப்பிட்ட பிள்ளை
     “சும்மா இரு-ன்னு சொன்னா வளர்ந்திடுச்சுன்னு அர்த்தம்!புதிய ஓட்டம்-கவிதைமணி

புதிய ஓட்டம்-கவிதைமணி
திணமனி  வலைத்தளத்தில் பதிந்து மீள்பதிவு
                                புலர்பொழுதின் காலையிலே கதிர் பரப்பும்
                                பகலவன் பயணமும் பூங்காவின் உள்ளே
                                மலரொன்றைத் தழுவி புத்துணர்வை ஊட்ட
                                மணம்தான் எங்கும்வீச புதிய ஓட்டமாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...