இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

இனிய கவிதை உலா-kavithaigal0510.blogspot.com-பக்கங்கள்-உதைத்தால் சுகமே

அன்றலர்ந்த ரோஜா
அழகாய் இருந்தன !
அன்றலர்ந்த ரோஜாவாய்
அழகாய் சிரித்தது மழலை !


மெத்தென இருக்கும் பட்டு
மேனியில் பட்டால் சுகமே!
மெத்தென மழலைப் பாதம்
மேனியில் உதைத்தால் சுகமே!

பன்னீரைத் தெளித்தது ரோஜா
பன்னீரின் வாசத்தில் மயக்கம்
பால்வடி மழலையின் எச்சிலோ
பன்னீராய் தெளித்தால் மயக்கம்!

ரோஜாவைப் பார்க்கும் போதே
உடலெங்கும் ஓடுதே துடிப்பு
மயக்கிடும் மழலையைக் கண்டாலே
மனதெங்கும் நிறையுதே உயிர்ப்பு!

எழிலான ரோஜாவும் புதிதுதான்
இன்ப மழலையும் இனிய புதினம்தான்
செழிப்பான கன்னத்தில் ஈவோமே!

சொர்க்கத்தின் சுகம்தன்னை காண்போமே!உதைத்தால் சுகமே-இனிய கவிதை உலா


4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...