வியாழன், 10 ஆகஸ்ட், 2017

நதிக்கு பாடலா ?

நதிக்கு பாடலா ?

          உனை தேடி அலைகின்றோம் உயிர் வாழவே                          
        ஓடோடி வருவாயா ? மண்மீது  எமைத் தேடியே !

http://kavithaigal0510.blogspot.com
நதிக்கு பாடலா ?


             மலைமீது பிறந்தவளே ! மாசில்லா வெண்துகளே!
     மழைக்கு பிறந்தவளே! மடிதவழ வாரோயோ!?
     நிலையென்று நம்பியே நிர்க்கதியாய் விட்டுவிட்டோம்!
     நில்லாது வந்திடவே நேர்த்திகடன் செய்து நின்றோம்!

     அழைக்கும்போது வாராது அழுகையை வரவைப்பாய்!
     அழையாத போதேதான் ஆர்ப்பரித்து வந்திடுவாய்!
     தழைக்கும் பயிர் கருகுதம்மா? தாகமும் எடுக்குதம்மா !
     தரணிவாழ வந்துவிட்டால் தேரிழுத்து மகிழ்வோமே!

     நீயின்றி உலகில்லை! நினைத்து பார்க்கும் நேரமிது
     நெடுநாளாய் காத்திருந்தும் நின்கருணை படவில்லை!
      தொய்வாக இருக்கின்றோம் ! தோள்கொடுக்க வருவாயா?                தொல்லைகளை மறந்துவிட்டு துயர்துடைக்க வந்திடுவாய்!

      மடிசுரண்டி பிழைத்தோமே! மன்னித்து பொறுத்திடுவாய்
      மாளாத துன்பத்தையே மனதார பொறுத்தவளே!
      அடிதொட்டு வணங்கினோம் அரவணைத்து கொள்வாயோ?
      அழைத்தபின்னும் அசைந்து வருவது ஏன்தானோ?


                கவிஞர் கே. அசோகன்.

16 கருத்துகள்:

  1. நீங்கள் அழைத்த நேரத்தில் காவிரி பொங்கும் பூம்புனலாய் பெருக்கெடுத்து வந்து விட்டதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தால் மகிழ்ச்சிதான் தங்கள் கருத்துக்கும் சேர்த்து

      நீக்கு
  2. நிலையென்று நம்பியே... வரிகளும், தழைக்கும் பயிர் கருகுதம்மா வரிகளும் மடி சுரண்டி பிழைத்தோமே வரிகளும் மிகவும் ரசிக்க வைத்தன.

    தம இரண்டாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டு என்னை ஊக்கப்படுத்துகின்றன

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் பொன்னான கருத்துக்கு மகிழ்ந்தேன்

      நீக்கு
  4. மன்னிக்குமளவுக்கா நாம இயற்கைக்கு துரோகம் செய்திருக்கோம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையை சீரழித்த தால்தான் அவ்வப்போது இயற்கை சீற்றமாக நம்மை அலைக்கழிக்கிறது. மிக்க நன்றி

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியும் நன்றியும்

      நீக்கு
  6. செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கிறது இயற்கையிடமிருந்து...
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தான கருத்துக்கு மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும்

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...